ARTICLE AD BOX
அனிருத்துக்கு தெரியுமா இது.. கண் கலங்கிய அம்மா.. மனம் திறந்த பேட்டி!
சென்னை: தமிழ் திரையுலகின் ராக்ஸ்டாராக வலம் வரும் இசையமைப்பாளர் அனிருத்துக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. 34 வயது ஆகும் அவர் முரட்டு சிங்கிளாக வலம் வருகிறார். இந்நிலையில், ஏன் அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்ற செய்தி பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர். இதற்கு அனிருத்தின் அம்மா லட்சுமி ரவிச்சந்திரன் மனம் திறந்து பேசியுள்ளார்.
ராக்ஸ்டார்: தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் அனிருத். விஜய், ரஜினி, அஜித் என டாப் ஹீரோக்கள் படங்களுக்கு இசையமைப்பதன் மூலம் பிஸியான இசையமைப்பாளராக வலம் வருகிறார். இவர் இசையமைக்கும் படங்களும் செம்ம ஹிட் அடிக்கிறது. அனிருத் இசை என்றால் காது கிழியும், இளைஞர்கள் கால்கள் ஆடும் அளவிற்கு டிரெண்ட் செட்டராக மாறியுள்ளார். தமிழ் சினிமாவில் ராக்ஸ்டார் என செல்லமாக அழைக்கப்படுகிறார்.

டாப் ஹீரோக்கள்: தற்போது அனிருத் விஜய்யின் ஜனநாயகன், ரஜினிகாந்தின் கூலி, கமலின் இந்தியன் 3 ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் பணியாற்றி வருகிறார். அனிருத் இசையென்றால் காபி அடித்து பாட்டு போடுவதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன. அவர் இசையமைக்கும் பாடல்கள் ஹிட் அடித்தாலும் அவை எந்த படத்தில் இருந்து காபி அடித்த பாடல் என்று நெட்டிசன்கள் அலசி ஆராய்கின்றனர். ஆனாலும், அனிருத் இல்லாமல் டாப் ஹீரோக்கள் படங்களே கிடையாது.
காதல் தோல்வி: சில வருடங்களுக்கு முன்பு இவர் நடிகை ஆண்ட்ரியாவை காதலித்ததாக கூறப்பட்டது. பின்னர் அந்த காதல் முறிந்ததால் இருவரும் பிரிந்தனர். அதன் பிறகு எந்த ஒரு கிசுகிசுவிலும் சிக்காமல் முரட்டு சிங்கிள் ஆக இருந்து வருகிறார். அனியும் நெல்சனும் சேர்ந்தாலே பட்டாசுதான். தனியார் சேனலில் காதல் தோல்வி குறித்த சீன் சொல்லும் போது நெல்சன் கிண்டலாக லவ் பெய்லியர்னா தலைவன் ஏர்லே பறந்து வாசிப்பார் என தெரிவிப்பார். அங்கு இருப்பவர்கள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள்

திருமணம் எப்போது?: அனிருத்துடன் நட்பு வட்டாரத்தில் இருக்கும் கீர்த்தி சுரேஷ், நயன் - விக்கி என எல்லோரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இன்னும் முரட்டு சிங்கிளாகவே இருக்கும் அனிருத்தின் எதிர்காலத்தை நினைத்து அவரது அம்மா லட்சுமி ரவிச்சந்திரன் மிகவும் கவலைப்படுகிறார். தற்போது, லசட்சுமி அனிருத்தின் திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
அனிருத் ஒரு குழந்தை: அனிருத் அம்மா லட்சுமி அளித்த பேட்டியில், "அனிருத்தின் திருமணம் கடவுள் புண்ணியத்தால் எவ்ளோ சீக்கிரமா நடக்கிறதோ,அவ்ளோ நல்லது. அவனுடைய மனதை புரிந்து அவன் செய்யுற வேலை நேரத்தை அனுசரித்து ஒரு பெண் வர வேண்டும் என்பதற்காகத்தான் காத்திருக்கிறோம். அனிருத்தின் மன அமைதி ரொம்ப முக்கியம். அப்போ தான் அவனுடைய இசைத்துறையில் பல சாதனைகளை பண்ண முடியும். அவனை இன்றளவும் ஒரு குழந்தையாகவே பார்த்து பார்த்து ரொம்ப பக்க பலமாக இருந்து வருகிறேன்.

பொண்ணு கிடைக்கலையா?: அவன் மனசு கஷ்டப்படுகிற மாதிரி எதுவும் சொல்லமாட்டேன். அனிருத்தின் ஸ்டூடியோவை நான் தான் கவனித்து வருகிறேன். அவனுடை ஷெட்யூலை பார்த்துக் கொள்கிறேன். அனிருத்துடன் வேலை பார்த்தாலும் ஒரு லைனை கிராஸ் பண்ணக் கூடாது என்று நினைப்பேன். அவனுக்கு சீக்கிரம் ஒரு பொண்ணு கிடைக்கனும்" என கூறியுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் என்னது இன்னும் அனிருத்துக்கு பொண்ணு கிடைக்கலையா என கேள்வி கேட்க தொடங்கியுள்ளனர்.