ARTICLE AD BOX
பெங்களூரு: அந்நிய செலாவணி மோசடி தொடர்பாக அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரசுக்கு சொந்தமான தன்னார்வ தொண்டு நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் உலகம் முழுவதும் பல்வேறு தொண்டு நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்தியாவில் அவரது தொண்டு நிறுவனங்கள் மூலம் இந்திய அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக ஆளும் பாஜ குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், பெங்களூரு மற்றும் டெல்லியில் உள்ள சோரசின் ஓபன் சொசைட்டி பவுண்டேஷன் (ஓஎஸ்எப்), எக்கனாமிக் டெவலப்மென்ட் பண்ட் (இடிஎப்) மற்றும் அவைகளுடன் தொடர்புடைய சில சர்வதேச மனித உரிமை அமைப்புகள், அஸ்பாடா இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் என 8 இடங்களில் அமலாக்கத்துறை நேற்று திடீர் சோதனை நடத்தியது. சோரசின் ஓஎஸ்எப் நிறுவனம் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தை மீறி அந்நிய முதலீட்டை முறைகேடான வழியில் பயன்படுத்தியதாக தகவல்கள் கிடைத்த நிலையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
The post அந்நிய செலாவணி மோசடி அமெரிக்க தொழிலதிபரின் என்ஜிஓவில் ஈடி சோதனை appeared first on Dinakaran.