ARTICLE AD BOX
Sivakarthikeyan Latest News: நடிகர் சிவகார்த்திகேயன் தன்னிடம் இருந்த ஒரு பழக்கத்தை விட்ட பின்னரே தெளிவு வந்துள்ளதாக கூறியுள்ளார். இந்த விஷயம் இப்போது வைரலாகி வருகிறது.
![](https://static-gi.asianetnews.com/images/01jg8fdpx5nbb6sdw46abjg9n8/sivakarthikeyans-amaran-overseas-total-collection-report-out.jpg)
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக மாறி இருப்பவர் சிவகார்த்திகேயன். கடந்த ஆண்டு முன்னணி நடிகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'வேட்டையன்', விக்ரமின் 'தங்கலான்', சூர்யாவின் 'கங்குவா' போன்ற படங்கள் வெற்றி பெற முடியாமல் போராடி தோல்வியை தழுவிய நிலையில், அசால்ட்டாக 'அமரன்' திரைப்படத்தின் மூலம், ரூ. 300 கோடி வசூல் நாயகனாக மாறினார் சிவகார்த்திகேயன்.
![](https://static-gi.asianetnews.com/images/01jdseewj7fj57357qfk5may27/actor-sivakarthikeyan.jpg)
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருந்த இந்த திரைப்படம், சென்னையைச் சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. இதில் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்திருந்தார். மேலும், ராகுல் போஸ், புவன் அரோரா உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தை உலக நாயகன் கமலஹாசன் தன்னுடைய ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் தயாரித்திருந்தார்.
பிரகாஷ் ராஜ் பற்றி சரியாக கணித்த சோபன் பாபு; அப்படியே நடந்த ஆச்சர்யம்!
![அமரன் வெற்றியை தொடர்ந்து பராசக்தி](https://static-gi.asianetnews.com/images/01jjrcshdeh5ssx8z9d0wxqsey/new-project---2025-01-29t121216.944.jpg)
இந்த திரைப்படத்தின் பட்ஜெட் 70 முதல் 120 கோடி இருக்கும் என கூறப்பட்ட நிலையில், இந்த திரைப்படத்தின் திரையரங்க வசூல் மட்டுமே 335 கோடி என தெரிவிக்கப்பட்டது. இது தவிர டிஜிட்டல் உரிமம், சேட்டிலைட் உரிமம், விநியோகஸ்தர் தரப்பில் வியாபாரம் என அனைத்தும் நல்ல லாபத்தை இந்த திரைப்படத்திற்கு பெற்ற தந்தது.
அமரன் கொடுத்த வெற்றியின் உற்சாகத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் 'பராசக்தி' திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த திரைப்படமும் பயோபி திரைப்படமாக உருவாகி வருகிறது. மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
![சிவகார்திகேயன் நடித்து வரும் படங்கள்](https://static-gi.asianetnews.com/images/01jjtvrzqefhmp7c8xd3cpx6x9/new-project---2025-01-30t111133.475.jpg)
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த திரைப்படம் ஒரு பக்கம் பரபரப்பாக உருவாக்கி வரும் நிலையில், இதைத்தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்திலும் தன்னுடைய 26வது திரைப்படத்தை சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன், சோசியல் மீடியா பயன்பாடு குறித்து பகிர்ந்துள்ள தகவல் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் சோசியல் மீடியா யூசேஜ் குறித்து பேசிய இவர், கடந்த இரண்டு வருடங்களாக நான் சமூக வலைதள பக்கங்களை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டேன். அப்படி நிறுத்தியதால் எனக்குள் என்னிடம் ஏற்பட்ட மாறுதலை புரிந்து கொள்ள முடிகிறது.
34 வயதாகியும் முரட்டு சிங்கிள்; திருமணம் பற்றிய கேள்விக்கு ரெஜினாவின் எதிர்பாராத பதில் !
![சோசியல் மீடியா பயன்பாட்டை நிறுத்திய சிவகார்த்திகேயன்](https://static-gi.asianetnews.com/images/01jgznn2rn0ac78cnn8eqzjvky/actor-sivakarthikeyan-says-about-film-failure.jpg)
சமூக வலைதளங்களில் அவரவர் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருவார்கள். அதனால் சில சமயங்களில் சரியான முடிவுகளை எடுக்க முடியாமல் நான் குழம்பிவிடுகிறேன். தற்போது சோசியல் மீடியா பயன்படுத்துவதை நிறுத்தியதிலிருந்து, எந்த ஒரு முடிவையும் தெளிவாக எடுப்பதாக நான் உணர்கிறேன் என பேசி உள்ளார். இந்த தகவல் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.