ARTICLE AD BOX

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று முடிவில் ஏ பிரிவில் டாப் இரண்டு இடங்களை பிடித்த நியூஸிலாந்து, இந்தியா அணியும், பி பிரிவில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று துபாயில் நடக்கும் முதலாவது அரை இறுதியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பலப்பரிட்சை நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் விராட் கோலி குறித்து புகழ்ந்துள்ளார். அதாவது,” கடினமான காலங்களில் இருந்து அனைத்து வீரர்களும் மீண்டு வருவதில்லை. போராடும் திறனும், ஆற்றலும், கிரிக்கெட்டின் மீதான காதலும் தான் அவரை ஒவ்வொரு முறையும் மீண்டு எழ செய்கிறது. அவரை பார்க்கும்போது என்னை பார்ப்பது போல் உள்ளது. அவர் ஐம்பது வயது வரை விளையாடலாம். இது கோலியின் காலம்” என்று பதிவிட்டுள்ளார்.