ARTICLE AD BOX

பாடகர்கள் திப்பு மற்றும் ஹரிணி தம்பதியின் மகனான சாய் அபயங்கர் பாடி சமீபத்தில் வெளியாகி இளைஞர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற பாடல் ‘கட்சி சேர’. கென் ராய்ஸ்சன் இயக்கியிருந்தார் . இந்த பாடலில் தமிழ் மற்றும் தெலுங்குவில் ஒரு சில படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்த சம்யுக்தா விஸ்வநாதன் நடித்திருந்தார். இந்தப் பாடலில் இவருடைய டான்ஸ் மூவ்ஸ் அனைவராலும் ரசிக்கப்பட்டது. பாடல் மிகப்பெரிய ஹிட் ஆகிய நிலையில் சமூக வலைதளங்களில், யூடியூப் சானல் என அனைத்திலுமே சம்யுக்தா வைரலானார்.
இவர் சுழல்-2 வெப்சீரிஸில் நிர்வாணமான காட்சிகளில் நடித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து கூறியுள்ள அவர், “இந்த காட்சிகளில் நடிக்கும் முன்பு என்னுடைய அம்மாவிடம் சொல்லி ஒப்புதல் பெற்றேன். சிறையில் நடக்கும் சம்பவங்களை மிகவும் ராவாக இயக்குனர் படமாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தில் நடிக்க இயக்குனர் கட்டாயப்படுத்தவில்லை. கதைக்கு தேவைப்பட்டதால் மட்டும்தான் அப்படி நடித்தேன்” என்று கூறியுள்ளார்.