இந்தியாவின் ஆன்லைன் கேமிங் துறை 2029ஆம் ஆண்டுக்குள் 2 மடங்கு வளர்ச்சி பெற்று 9.1 பில்லியன் டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வளர்ச்சியில் பெரும்பாலான பகுதியை பணம் அடிப்படையிலான விளையாட்டுகளே (Real Money Games) முக்கிய பங்கு பெறும் என்று WinZO Games மற்றும் IEIC(Interactive Entertainment and Innovation Council) ஆகிய நிறுவனங்கள் நேற்று வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சான் பிரான்சிஸ்கோவில் நடந்த கேம் டெவலப்பர்கள் மாநாட்டில் (GDC) வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், இந்தியாவின் ஆன்லைன் கேமிங் சந்தை வருவாய் 2024 ஆம் ஆண்டில் $3.7 பில்லியனாக இருந்தது என்றும், உண்மையான பணம் அடிப்படையிலான கேமிங் பிரிவு மட்டுமே சுமார் 86% சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
"இந்தியாவின் ஆன்லைன் கேமிங் தொழில் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சி பாதையில் உள்ளது. 2029ஆம் ஆண்டுக்குள் $9.1 பில்லியன் சந்தை அளவை எட்டும் என மதிப்பீடு செய்யப்படுகிறது. மேலும், 2029க்குள் 63 பில்லியன் டாலர் முதலீட்டாளர் மதிப்பை உருவாக்கும் திறன் கொண்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து WinZO இணை நிறுவனர் பவன் நந்தா கூறுகையில், தொழில்நுட்ப கண்டுபிடிப்பு, ஐபி உருவாக்கம் (IP creation), மற்றும் பயனர் ஈடுபாட்டில் புதிய எல்லைகளை தேடி முன்னேறிக்கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவை ஒரு உலகளாவிய கேமிங் மையமாக மாற்றுவதில் WinZO உறுதியாக செயல்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கையில் பகிரப்பட்ட தரவுகளின்படி, இந்தியாவில் 591 மில்லியன் (59.1 கோடி) கேமர்கள் உள்ளனர். இது உலகின் மொத்த கேமிங் மக்கள்தொகையில் 20 சதவீதமாகும். அதே நேரத்தில், இந்தியாவில் 11.2 பில்லியன் (தோராயமாக 112 கோடி) மொபைல் கேம் செயலிகள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. மேலும் Google Playstoreக்கு மாற்றாக பல புதிய விருப்பங்கள் உருவாகி வருகின்றன. இந்தியாவில் சுமார் 1,900 கேமிங் நிறுவனங்கள் உள்ளன, மேலும் இந்த துறையில் 1.3 லட்சம் உயர்தர தொழில்நுட்ப நிபுணர்கள் பணியாற்றி வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தத் துறைக்கு இதுவரை $3 பில்லியன் நேரடி வெளிநாட்டு முதலீடு (FDI) கிடைத்துள்ளது, இதில் 85% முதலீடு Pay-to-Play பிரிவுக்கு செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 2024ஆம் ஆண்டில், இந்தியாவின் ஆன்லைன் கேமிங் துறையின் அளவு 3.7 பில்லியன் டாலராக ஆக இருந்தது, மேலும் 2029ஆம் ஆண்டுக்குள் இது 9.1 பில்லியன் டாலர் சந்தை அளவை எட்டும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் உண்மையான பணம் அடிப்படையிலான கேமிங் (RMG - Real Money Gaming) துறை ஆன்லைன் கேமிங் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இது 3.2 பில்லியன் டாலர் மதிப்புடன், 85.7% வருவாயை உருவாக்குகிறது. மேலும், 2024ஆம் ஆண்டில், இந்தத் துறை 18% வளர்ச்சியுடன் முன்னேறி வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 85.7% பங்கைக் கொண்டுள்ள உண்மையான பணம் அடிப்படையிலான கேமிங் (RMG) துறை, 2029க்குள் 80% ஆக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், Non-RMG (உண்மையான பணமில்லா கேமிங்) துறையின் பங்கு 14.3% இலிருந்து 20% ஆக அதிகரிக்கும் என்றும் இந்திய ஆன்லைன் கேமிங் துறை 2029ஆம் ஆண்டுக்குள் முதலீட்டாளர்களுக்கு 63 பில்லியன் டாலர் மதிப்புடைய சந்தை வாய்ப்புகளை உருவாக்கும் திறன் கொண்டுள்ளது என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்தியாவின் ஒரே பொது பட்டியலிடப்பட்ட (Publicly Listed) கேமிங் நிறுவனம் olan Nazara Technologies, உலகளவில் பட்டியலிடப்பட்ட கேமிங் நிறுவனங்களில் உயர்ந்த பிரீமியத்தை (highest premium) கொண்டுள்ளது என்றும் தற்போதைய ஆன்லைன் கேமிங் துறையின் 3.7 பில்லியன் டாலர் சந்தை அளவுக்கு இதே மாதிரி மதிப்பீடுகள் பயன்படுத்தினால், குறைந்தபட்சம் 26 பில்லியன் டாலர் முதலீட்டாளர் மதிப்பு IPOகள் மூலம் வெளியிடப்பட வாய்ப்பு உள்ளது என்றும் 2029ஆம் ஆண்டில் சந்தை அளவு 9.1 பில்லியன் டாலர் ஆக சென்றுவிட்டால், இது 63 பில்லியன் டாலர் முதலீட்டாளர் மதிப்பை உருவாக்கும் என்றும் அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம், வளர்ந்து வரும் டெவலப்பர் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் சாதகமான ஒழுங்குமுறை சூழல் காரணமாக, இந்தத் துறை 2034 ஆம் ஆண்டுக்குள் 60 பில்லியன் டாலர்களை, தோராயமாக ரூ.5 லட்சம் கோடியை எட்டும் என்று அறிக்கை கூறுகிறது. இதன்மூலம் 20 லட்சம் (2 மில்லியன்) வேலை வாய்ப்புகள் உருவாகும், நேரடி வெளிநாட்டு முதலீடு (FDI) அதிகரிக்கும், மேலும் இந்தியாவின் மூலதன உரிமை (Indian IP) உலகளவில் ஏற்றுமதி செய்யப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.