ARTICLE AD BOX
/indian-express-tamil/media/media_files/2025/02/23/UyZqecU5UEzNJOFnVO3l.jpg)
சர்க்கரை நோயாளிகளுக்கு உள்ள பெரும் சிரமமே உணவுக் கட்டுப்பாடு தான். அதிலும் சில காய்கறி மற்றும் பழ வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டாம் என மருத்துவர் அறிவுறுத்தி வருகிறார்கள். அதேநேரம், சர்க்கரை நோயாளிகள் அவசியம் சாப்பிட வேண்டிய சில காய்கறிகளும் உண்டு. இந்த காய்கறிகள் வெறும் உணவு மட்டும் அல்ல. சர்க்கரையை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன.
/tamil-ie/media/media_files/uploads/2021/03/d422-1.jpg)
அத்தகைய அற்புதமான காய்கறிகளில் ஒன்று சுண்டைக்காய். வீட்டு தோட்டங்களில் சாதாரணமாக வளர்க்கப்படும் சுண்டைக்காய் அற்புதமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள ஒரு சிறந்த காய்கறி. அதுவும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது இன்னும் கூடுதல் சிறப்பு. இந்த சுண்டைக்காயின் மருத்துவ பயன்களையும், சர்க்கரை நோயாளிகளுக்கு எவ்வாறு உதவுகிறது என்பதையும் இப்போது பார்ப்போம்.
/indian-express-tamil/media/media_files/2025/01/22/HU9P5p83yFD61Z88mdMG.jpg)
சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் சுண்டைக்காயை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதுவும் இன்சுலின் பயன்படுத்தாதவர்கள் சுண்டைக்காய் சாப்பிடுவது அவசியம். ஏனெனில் சுண்டைகாய் உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/02/23/gyFFVX6StakNfoM1iRei.jpg)
சுண்டைக்காய் ரத்த வெள்ளை அணுக்களை அதிகரிக்கும் திறன் உடையது. இதனால், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். காய்ச்சல் நேரத்தில் சுண்டைக்காய் சாப்பிடுவது ரத்த வெள்ளை அணுக்களை அதிகரித்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். சுண்டைக்காய் நரம்பு மண்டலத்திற்கு சக்தி அளிக்க கூடியது. மேலும் பார்வை திறன் அதிகரிக்கவும், நினைவாற்றல் அதிகரிக்கவும் உதவுகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/02/23/rDGpQHu7YMaNi0ejn3Pf.png)
சுண்டைக்காயின் சிறந்த மருத்துவ குணங்களில் ஒன்று காயங்கள் மற்றும் புண்களை ஆற்றுவதாகும். சுண்டைக்காயில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இது ரத்த சோகையை தவிர்க்க உதவுகிறது. மேலும் உடலின் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. காய்ந்த சுண்டைக்காய் பொடியில் ஆண்டி ஆக்ஸிடெண்ட் அதிகம். எனவே இந்தப் பொடியை அடிக்கடி உணவில் கலந்து சாப்பிட்டால் உடல் புத்துணர்ச்சி அடையும்.
/indian-express-tamil/media/media_files/2025/02/23/Ya77kEMRo4CIpAJupqSn.png)
இந்த சுண்டைக்காய் பொடியை நெய்யில் வறுத்து பொடியாக்கி சாதத்தில் போட்டு டயாபெடிக் நோயாளிகள் சாப்பிட்டு வந்தால் உங்கள் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்