ARTICLE AD BOX
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 200 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை முகமது ஷமி படைத்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது. அந்த அணி 228 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர் சௌமியா சர்க்காரை ஷமி 0 ரன்னில் ஆட்டமிழக்கச் செய்தார் முகமது ஷமி. அதன் பின், மெஹிதி ஹாசன் மிராஸ் மற்றும் ஜேக்கர் அலி ஆகியோரின் விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் விலகல்!
200 விக்கெட்டுகள்
ஜேக்கர் அலியின் விக்கெட்டினைக் கைப்பற்றிய முகமது ஷமி, ஒருநாள் போட்டிகளில் புதிய சாதனை ஒன்றை படைத்தார்.
2⃣0⃣0⃣ wickets and counting!
Mohd. Shami becomes the fastest bowler for India to scalp 200 ODI wickets!
Follow the Match ▶️ https://t.co/ggnxmdG0VK#TeamIndia | #BANvIND | #ChampionsTrophy | @MdShami11 pic.twitter.com/CqLyuQPh3X
ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். ஒட்டுமொத்தமாக பார்க்கையில், ஒருநாள் போட்டிகளில் அதிகவேகமாக 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இரண்டாவது வீரர் என்ற பெருமை அவரையேச் சேரும். 104 போட்டிகளில் அவர் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
குறைந்த போட்டிகளில் விளையாடி 200 விக்கெட் வீழ்த்தியவர்கள்
மிட்செல் ஸ்டார்க் - 102 போட்டிகள்
முகமது ஷமி - 104 போட்டிகள்
டிரண்ட் போல்ட் - 107 போட்டிகள்
பிரெட் லீ - 112 போட்டிகள்
ஆலன் டொனால்டு - 117 போட்டிகள்
இதையும் படிக்க: 6-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள்.! வங்கதேச வீரர்கள் புதிய சாதனை!
ஒருநாள் கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் (5,126 பந்துகள்) அதிவேகமாக 200 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் முகமது ஷமி படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.