ARTICLE AD BOX

ஐபிஎல் இன் 18 ஆவது டி20 தொடர் ஆனது இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரானது வரும் மார்ச் இருபத்தி இரண்டாம் தேதி தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த தொடரில் சென்னை அணியானது தன்னுடைய தொடக்க ஆட்டத்தை வரும் 23ஆம் தேதி மும்பை அணியை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் மும்பை அணியின் கேப்டனாக சூர்யகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ரோஹித் சர்மா, சூர்யகுமார். பும்ரா ஆகியோர் இந்திய அணியை வழிநடத்தும் மூன்று ஃபார்மட் கேப்டன்கள் மும்பை அணியில் இருப்பதால் கவலை இல்லை என்று ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.
இது குறித்து கூறிய அவர் , “சூர்யகுமார் இந்திய டி20 அணியை வழி நடத்துகிறார். எனவே நான் இல்லாத போது டி20 கிரிக்கெட்டில் மும்பை அணியை வழி நடத்துவதற்கு அவர் சரியானவர். 2 முதல் 2.5 நிமிடங்கள் தாமதமாக நாங்கள் பௌலிங் செய்தோம். அப்போது இந்த விதிமுறைகள் பற்றி எங்களுக்கு பெரிதாக தெரியாது. இந்த முறை ரோகித் சர்மா, சூர்யகுமார், பும்ரா ஆகிய மூன்று கேப்டன்களோடு இணைந்து விளையாட போகும் அதிர்ஷ்டக்காரன் நான் தான். அவர்கள் என்னுடைய தோள் மேல் கை போட்டு தேவைப்படும்போது உதவி செய்ய தயாராக இருப்பார்கள் என்று கூறியுள்ளார்.