ARTICLE AD BOX
கூகுள் தேடுதல் தளத்தில் அமெரிக்க அதிபர்கள் யார் யார் என்று தேடியபோது 2020 - 24 ஆண்டுகளில் அதிபராக இருந்த ஜோ பைடன் பெயரையும் படத்தையும் விட்டு விட்டது கூகுள். பராக் ஒபாமாவுக்குப் பிறகு டொனால்ட் ட்ரம்ப் மறுபடி மீண்டும் டொனால்ட் ட்ரம்ப் என்று காட்டியுள்ளது. இடையில் 2020-24 அதிபர் ஜோ பைடன் பெயரும் படமும் இல்லை. இந்த தவறை பயனாளர்கள் சுட்டிக் காட்டிய பிறகு கூகுள் இதை சரிசெய்துள்ளது.
இது தகவல் தவறு என்று சப்பைக் கட்டும் கட்டியுள்ளது கூகுள். என்னங்க கூகுள் இப்படிப் பண்ணலாமா? இன்னைக்கு வீட்டிலே சோறு இருக்கா இல்லையான்னு கூட கூகுளைத் தான் நம்மாளுங்க கேட்டுத் தெரிஞ்சிக்கிறாங்க. நீங்களே இவ்வளவு பெரிய தப்பைப் பண்ணினால் என்ன பண்ணுவான் நெட்டிசன்?