ARTICLE AD BOX
உத்தரப்பிரதேச மாநிலத்தில் திருமணத்திற்கு குடிபோதையில் வந்த மணமகன், மணப்பெண்ணுக்கு மாலை போடுவதற்கு பதிலாக தனது நண்பருக்கு அணிவித்ததால் அங்கு அதிர்ச்சி நிலவியது. இந்த சம்பவத்தையடுத்து மணப்பெண் திருமணத்தை நிறுத்தியுள்ளார். மணமகளின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில், மணமகனின் குடும்பத்தினர் ஐவர் மீது வரதட்சனை துன்புறுத்தல், பொது அவமானம் ஆகிய பிரிவுகளின் கீழ் கியோல்டியா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.