ARTICLE AD BOX
அதிரவிடும் விலை.. வருகிறது புதிய Google பிக்சல் போன்.. OLED டிஸ்பிளே.. 48எம்பி கேமரா.. எந்த மாடல்?
கூகுள் நிறுவனம் தனது புதிய கூகுள் பிக்சல் 9ஏ ((Google Pixel 9a) ஸ்மார்ட்போனை வரும் 2025 மார்ச் மாதம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு கூகுள் பிக்சல் 9ஏ போனின் விலை கசிந்துள்ளது.
அதன்படி கூகுள் பிக்சல் 9ஏ ஆனது ரூ.50,200 விலையில் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஏற்கனவே ஆன்லைனில் கசிந்த கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

கூகுள் பிக்சல் 9ஏ அம்சங்கள் (Google Pixel 9a specifications): கூகுள் டென்சார் ஜி4 (Google Tensor G4) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் இந்த டென்சார் ஜி4 சிப்செட். அதுவும் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.
குறிப்பாக 6.3-இன்ச் ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். பின்பு இநதன் டிஸ்பிளேவில் HDR10+,2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு உள்ளது. குறிப்பாக பிக்சல் 8ஏ ஸ்மார்ட்போனை விட பெரிய டிஸ்பிளே உடன் இந்த பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.
அதேபோல் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் கூகுள் பிக்சல் 9ஏ போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொண்டுள்ளது இந்த பிக்சல் போன். கூகுள் பிக்சல் 9ஏ போனின் பாதுகாப்பு வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது கூகுள் நிறுவனம்.
48எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ராவைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இந்த போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
5000mAh பேட்டரி உடன் கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18W வயர்டு மற்றும் 7.5W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகள் உள்ளன. குறிப்பாக இந்த போனின் பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் 7 வருடங்களக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதுதவிர வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
photo credit: X/ @Sudhanshu1414, indiatoday