அதிரடி மாற்றங்களுடன் டான்ஸ் ஜோடி டான்ஸ்.. சாமானியனின் ஆட்டம் ஆரம்பம்

3 hours ago
ARTICLE AD BOX

அதிரடி மாற்றங்களுடன் டான்ஸ் ஜோடி டான்ஸ்.. சாமானியனின் ஆட்டம் ஆரம்பம்

Television
oi-V Vasanthi
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக விளங்கி வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. அதன் படி மக்களின் மனம் கவர்ந்து பல சீசன்களை கடந்த டான்ஸ் ஜோடி டான்ஸ் ரி- லோடட் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வரும் மார்ச் 1-ம் தேதி கோலாகலமாக ஆரம்பமாக உள்ளது.

தமிழகம் உட்பட பல்வேறு இடங்களில் ஆடிஷன் நடைபெற்ற நிலையில் மெகா ஆடிஷன் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ள 24 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்குகிறது. அதுமட்டுமின்றி இந்த முறை பாபா பாஸ்கர், சினேகா ஆகியோருடன் வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடுவராக பங்கேற்க உள்ளனர். இதன் மூலமாக வரலக்ஷ்மி முதல் முறையாக நடுவராக தடம் பதிக்கிறார்.

Zee Tamil VJ Manimegalai dance jodi dance show

மேலும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை சோலோவாக ஆங்கரிங் செய்து வந்த ஆர்.ஜே விஜய் இம்முறை விஜே மணிமேகலையுடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாகவும் ப்ரோமோ வீடியோ மூலமாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜீ தமிழ் போனதும் மணிமேகலை போட்ட முதல் போஸ்ட்..பிரியங்கா ஸ்டோரியில் பகிர்ந்த செய்தி..குவியும் கமெண்ட்
ஜீ தமிழ் போனதும் மணிமேகலை போட்ட முதல் போஸ்ட்..பிரியங்கா ஸ்டோரியில் பகிர்ந்த செய்தி..குவியும் கமெண்ட்

இறுதி போட்டியாளர்களை தேர்வு செய்யும் மெகா ஆடிஷன் வரும் சனி மற்றும் ஞாயிறு ( மார்ச் 1 மற்றும் 2 ) இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இதுகுறித்த ப்ரோமோ வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகி மக்களை கவர்ந்து வருகிறது.

Zee Tamil VJ Manimegalai dance jodi dance show

கண்கள் கண்ட கனவுகளை கால்கள் நிறைவேற்றும் பிரம்மாண்ட மேடையாக இந்த டான்ஸ் ஜோடி டான்ஸ் அமைய உள்ளது. இம்முறையும் பல சாமானிய போட்டியாளர்கள் சாதனையாளர்களாக தடம் பதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Zee Tamil VJ Manimegalai dance jodi dance show
 நீ தான் க்ரிஷ் அம்மா! ரோகிணியிடம் மனோஜ் சொன்ன வார்த்தை.. ஆடிப்போன விஜயா குடும்பம்
சிறகடிக்க ஆசை: நீ தான் க்ரிஷ் அம்மா! ரோகிணியிடம் மனோஜ் சொன்ன வார்த்தை.. ஆடிப்போன விஜயா குடும்பம்

வரும் மார்ச் 1 முதல் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 8:30 மணிக்கு டான்ஸ் ஜோடி டான்ஸ் ரி-லோடட் 3 நிகழ்ச்சியை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பார்க்கலாம். அதிலும் தற்போது வெளியான ப்ரோமோக்களில் இரண்டு குழந்தைகளின் அம்மா தன்னுடைய டான்ஸ் கனவை நிறைவேற்றுவதற்காகவும் தன்னுடைய குடும்பத்தின் நிலைமையை உயர்த்துவதற்காகவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக கண்கலங்க கூறியிருந்தார்.

Zee Tamil VJ Manimegalai dance jodi dance show

அதுபோல சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டு பல்வேறு அவமானங்களை பட்டு தன்னுடைய நிலையை மாற்ற வேண்டும் என்ற துடிப்போடு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு போட்டியாளரை சிம்மாசனத்தில் உட்கார வைத்து அவரை கால் மேல் கால் போட வைத்து பாபா பாஸ்கர் செய்த செயல் இணையத்தில் அதிகமான பாராட்டு பெற்று வருகிறது.

More From
Prev
Next
English summary
Zee Tamil is one of the leading television channels in the Tamil film. Serials and reality shows that are broadcast on this channel are very welcome. Accordingly, the third season of the dance pair dance re-loaded show, which has been attracted to the people's mind, will begin on March 1.
Read Entire Article