அதிமுகவுக்கு ஆதரவு கொடுங்க.. திமுக கூட்டணி எம்எல்ஏவை திடீரென சந்தித்த ஓஎஸ் மணியன்

2 days ago
ARTICLE AD BOX

அதிமுகவுக்கு ஆதரவு கொடுங்க.. திமுக கூட்டணி எம்எல்ஏவை திடீரென சந்தித்த ஓஎஸ் மணியன்

Nagapattinam
oi-Nantha Kumar R
Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டினம்: அதிமுகவுக்கு ஆதரவு கொடுங்க என்று திமுக கூட்டணியை சேர்ந்த கீழ்வேளூர் சட்டசபை தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ நாகை மாலியை சந்தித்து முன்னாள் அமைச்சர் ஓஎஸ் மணியன் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் என்பது நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக திமுக, அதன் கூட்டணி கட்சிகளும், எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இப்போதே வியூகம் வகுக்க தொடங்கிவிட்டன.

admk os manian nagai mali

அதேபோல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வெற்றிக் கழகத்தை புதிதாக தொடங்கி உள்ள விஜயும் தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.

இதனால் விரைவில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் களம் என்பது சூடுபிடிக்க தொடங்க உள்ளது. இந்நிலையில் தான் திமுக கூட்டணியை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ நாகை மாலியை சந்தித்து அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான ஓஎஸ் மணியன் ஆதரவு கோரியுள்ளார்.

இரண்டரை வருடம் முதல்வர் பதவி வேண்டும்.. எடப்பாடியிடம் கண்டிப்பாக சொன்ன தவெக! உருவாகாத அதிமுக கூட்டணி
இரண்டரை வருடம் முதல்வர் பதவி வேண்டும்.. எடப்பாடியிடம் கண்டிப்பாக சொன்ன தவெக! உருவாகாத அதிமுக கூட்டணி

ஓஎஸ் மணியன் 2வது முறையாக நாகை மாவட்டம் வேதாரண்யம் சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாகையில் அதிமுகவுக்கு ஆதரவு கோரி அவர் தலைமையில் அந்த கட்சியின் ‛திண்ணை பிரசாரம்' மேற்கொண்டனர். இந்த பிரசாரத்தின்போது தமிழக மக்களுக்காக முந்தைய அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகள் குறித்த விபரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வீடு வீடாகவும், கடைகளுக்கும் வழங்கி வந்தனர்.

அப்போது ஹோட்டல் ஒன்றில் ஓஎஸ் மணியன் மற்றும் அதிமுகவினர் நுழைந்தனர். அப்போது அங்கு கீழ்வேளூர் சட்டசபை தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏவாக நாகை மாலி இருந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தற்போது திமுக கூட்டணியில் உள்ளது. இப்படியான சூழலில் ஓஎஸ் மணியன் அதிமுகவின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரத்தை நாகை மாலி எம்எல்ஏவிடம் வழங்கியதோடு, அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

இவர்கள் 2 பேரும் எதார்த்தமாக ஹோட்டலில் சந்தித்து கொண்ட வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

More From
Prev
Next
English summary
Former Minister OS Manian met with Naga Mali, the MLA of thet Communist Party of India (Marxist) for the Kilvelur assembly constituency, a member of the DMK alliance, and requested him to support the AIADMK.
Read Entire Article