அதிமுக-வின் தலைமையேற்க சசிகலாவிற்கு அழைப்பு… எடப்பாடியார் அணியை அதிர வைக்கும் போஸ்டர்கள்..!

2 days ago
ARTICLE AD BOX

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் சசிகலாவை அதிமுகவுக்கு தலைமை தாங்க வரவேற்றும் மதுரை, மேலூர் மாவட்டங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அணிகள் ஒன்றினைய வாய்ப்பில்லை என எடப்பாடி பழனிசாமி சூசகமாக தெரிவித்து இன்று அறிக்கை வெளியிட்டு இருந்த நிலையில் இந்த சுவரொட்டிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக மதுரை விமான நிலையம் முதல் ரிங் ரோடு, சிந்தாமணி, விரகனூர் ரோடு, திருப்பரங்குன்றம் பகுதிகளில் “அதிமுக தலைமையே ” என்று சசிகலா ஆதரவாளர்களால் ஒட்டப்பட்ட போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுகவின் கட்சி, மற்றும் கொடி உள்பட எதற்கும் உரிமை கோரக்கூடாது என தற்போதைய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் எச்சரிக்கப்பட்ட பின்னும் சசிகலா ஆதவாளர்களால் “அதிமுகவின் தலைமையே..” என ஒட்டப்பட்ட போஸ்டர்கள் எடப்பாடி பழனிசாமி தரப்பினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மதுரை,உசிலம்பட்டியில் இன்று மாலை நடைபெறும் அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து விமானம் மூலம் வரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும், திமுக முன்னாள் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலாவை வரவேற்று அதிமுக சசிகலா ஆதரவு தொண்டர்கள் இந்த போஸ்டரை ஒட்டியுள்ளனர்.

மதுரையைச் சேர்ந்த டி.ஹெச்.உமாபதி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அந்த சுவரொட்டியில், தலைமைக்கு தகுதியே என்றென்றும் எங்கள் அதிமுகவின் தலைவியே..” என்றும், திசை தெரியாமல் செல்லும் (அதிமுக) கப்பலை தலைமை ஏற்க வருக என்பது போன்ற பரபரப்பு வாசகங்கள் அந்த போஸ்டர்களில் இடம்பெற்றுள்ளது.

மதுரை விமான நிலையம் ,பெருங்குடி, மண்டேலா நகர், ரிங் ரோடு, சிந்தாமணி, விரகனூர் ரிங் ரோடு, தெப்பக்குளம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் சசிகலா ஆதரவாளர்களால் ஒட்டப்பட்ட போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே சமீப காலமாக அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன்,  கோகுல இந்திரா போன்றவர்களின் பரபரப்பு சர்ச்சையில் தற்போது வி.கே.சசிகலாவை வரவேற்று ஒட்டிய போஸ்டர்கள் மீண்டும் அதிமுகவில் புயலை கிளப்பி உள்ளது.

அதிமுகவின் கோட்டையாக விளங்கிய தென் மாவட்டங்களில் இப்போது கட்சி உடைந்த பின் எடப்பாடி பழனிசாமிக்கு செல்வாக்கு இல்லை எனக்கூறப்படுகிறது. ஆனால், அங்கு சசிகலா விசுவாசிகள் எப்போதும் அவருக்கு ஆதரவு வழங்கி வருகின்றனர்.

Read Entire Article