ARTICLE AD BOX
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று சமூக வலைதள பதிவில் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவை மாநகர் அதிமுக மாவட்ட செயலாளரும், கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் அர்ச்சுனன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை ஏவியுள்ள அரசுக்கு எனது கடும் கண்டனங்கள். 2வது முறையாக சட்டமன்ற உறுப்பினராக உள்ள அம்மன் அர்ச்சுனன், திறம்பட செய்து வரும் கட்சி பணியை தடுக்கும் விதமாக, லஞ்ச ஒழிப்பு துறை சோதனையை செய்துள்ளது. இவ்வாறு எடப்பாடி கூறியுள்ளார்.
The post அதிமுக எம்எல்ஏ மீதான விஜிலென்ஸ் சோதனைக்கு எடப்பாடி கண்டனம் appeared first on Dinakaran.