அதிக சிந்தனை : அதிகம் சிந்திப்பதை தடுத்து, மகிழ்வான வாழ்வு வாழ என்ன செய்யவேண்டும்?

4 hours ago
ARTICLE AD BOX

எதைத் தடுக்கலாம் என்பதில் கவனம்செலுத்துங்கள்

அவர்களால் கட்டுப்படுத்த முடியாத விஷயம் குறித்துதான் மக்களிடம் அதிக சிந்தனை நடைபெறுகிறது. மனஅழுத்தத்தைக் கொண்டுவரும் ஒவ்வொரு சாதகமான சூழலிலும், கவனம் செலுத்துவதைவிட்டு, மாற்றத்தைக் கொண்டுவரும் செயல்களில் கவனம் செலுத்தலாம்.

72 மணி நேர விதி

அதிகம் சிந்திப்பதைத் தடுக்கும் ஒரு எளிய கேள்வி என்னவென்றால், 72 மணி நேரத்துக்குப் பின்னர் இது பெரிய விஷயமா? எனக்கேட்கும்போது, அது அந்த நேரத்தில் பெரிய விஷயமாக இருந்த விஷயங்களை சில நாட்களில் தேவையற்றதாக மாற்றுகிறது. இந்த விதியை நீங்கள் பயன்படுத்தும்போது, சிறிய கவலைகளை அது எளிதாக விரட்டியடிக்கிறது.

அதிகம் சிந்திப்பது என்ற சுழற்சியை தடுங்கள்

அதிகம் சிந்திப்பது என்பதை நீங்கள் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கும்போது அது பழக்கமாகிறது. அது வலுவாகும்போது, உங்களுக்கு தொந்தரவு தரும். எனவே நீங்கள் சிந்திக்க துவங்கும் முன்னேர விழிப்புடன் அதை தடுத்து நிறுத்துங்கள். இது உங்களுக்கு சிறிய இடைவெளி கிடைக்க உதவுகிறது. நீங்கள் நிதானமாக மூச்சு விடலாம். வேறு ஒன்றில் கவனம்செலுத்த முடியும்.

5 நிமிட நேரம்

ஒரு விஷயம் குறித்து 5 நிமிடங்கள்தான சிந்திக்க வேண்டும் என்பதைச் செய்யுங்கள். இது அதிகம் சிந்திப்பதைத் தடுக்கும். சரியாக 5 நிமிடங்கள் செட் செய்துவிட்டு, அதுகுறித்து யோசித்துவிட்டு, அதிலிருந்து நகர்ந்துவிடுவது நல்லது. அந்த சிந்தனைகளிலே மூழ்கிக் கிடக்காமல், ஏதேனும் செயல்களில் ஈடுபடலாம்.

மோசமாக நினைப்பதை நிறுத்துங்கள்

மனித மூளை என்பது சில விஷயங்கள் குறித்து மோசமாக சிந்திக்கும் தன்மைகொண்டது. அதற்கு குறைவாக அளவு ஆதாரங்களே இருந்தாலும் அது, அதை பிடித்துக்கொண்டு மோசமாக சிந்திக்கும். என்ன நடக்கும் என்று எண்ணும் மனதை பயத்தில் இருந்து சாத்தியத்தை நோக்கி நகர்த்தவேண்டும்.

கோணங்கள்

சில நேரங்களில் சிந்தனைகள் உண்மையைவிட மிகப்பெரியதாக இருக்கலாம். எனவே நம்பகமானவர்களுடன் பேசுவது, எழுதுவது அல்லது ஒரு சிறிய இடைவெளி எடுத்துக்கொள்வது என அனைத்துமே சிறப்பான கோணத்தைத் தேர்ந்தெடுக்க உதவும். இதை பெரிதாகப் பார்க்கும்போது எண்ணற்ற கவலைகள தற்காலிகமானவை என்பது புரியும்.

சிறியதாக இருந்தபோதும் செயல்படுங்கள்

அதிகம் சிந்திக்கும்போது உங்களால் செயல்பட முடியாமல் போகும். எனவே சூழலை எல்லையின்றி ஆராய்ந்துகொண்டே இருக்காமல், சிறிய அடி முன்னெடுப்பது கூட நல்லது. ஒரு மெயில் அனுப்புவது, முடிவு எடுப்பது மற்றும் துவங்குவது என சிறிய விஷயங்கள் கூட மனஅழுத்தத்தைக் குறைக்கும்.

மனஆற்றலை பாதுகாக்க வேண்டும்

ஒவ்வொரு சிந்தனைக்கும் கவனம் தேவையில்லை. ஆற்றல் வற்றிக்கொண்டு இருக்கிறது என்ற மனநிறைவு உங்களுக்கு வேண்டும். தேவையற்ற எதிர்மறை எண்ணங்களை தவிர்க்கவேண்டும். சமூக வலைதளங்கள் அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும். மனநிறைவைப் பழகுவது உங்கள் மனம் அமைதி மற்றும் கவனம்செலுத்த உதவும்.

Priyadarshini R

TwittereMail
பிரியதர்ஷினி. ஆர். திருச்சியைச் சேர்ந்தவர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவி. 2005ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். தினமலர், சன் நியூஸ், விஜய் டிவி என அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பணிபுரிந்துவிட்டு, 2023ம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் சிறப்பு செய்திகளை வழங்கி வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
Read Entire Article