ARTICLE AD BOX
நடிகை பூஜா ஹெக்டே, விஜயின் ஜனநாயகன் படம் குறித்து பேசி உள்ளார்.
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் ஜனநாயகன். விஜயின் 69 ஆவது படமான இந்த படத்தை ஹெச். வினோத் இயக்க கே வி என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சத்யன் சூர்யன் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ஏற்கனவே பீஸ்ட் படத்திலிருந்து இணைந்த இந்த கூட்டணி தற்போது மீண்டும் ஜனநாயகன் திரைப்படத்தில் இணைந்துள்ளது. மேலும் இப்படத்தில் மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன், பாபி தியோல் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அரசியல்வாதியாக மாறியுள்ள விஜயின் கடைசி படம் இது என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே, ஜனநாயகன் படம் குறித்து பேசி உள்ளார். அவர் பேசியதாவது, “ரசிகர்கள் மீண்டும் எப்போது விஜய் சாருடன் படம் பண்ண போகிறீர்கள் என்று எதிர்பார்த்தார்கள். அதனால்தான் நான் மீண்டும் விஜயுடன் நடிக்கிறேன். நாங்கள் இருவரும் இணைந்து மீண்டும் அந்த மேஜிக்கை நிகழ்த்துவோம் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.