அண்ணாமலையை முடிந்தால் அண்ணா சாலைக்கு வரச் சொல்லுங்கள்! உதயநிதி ஸ்டாலின் சவால்

6 days ago
ARTICLE AD BOX

அண்ணாமலையை முடிந்தால் அண்ணா சாலைக்கு வரச் சொல்லுங்கள்! உதயநிதி ஸ்டாலின் சவால்

Chennai
oi-Vishnupriya R
Subscribe to Oneindia Tamil

udhayanidhi stalin annamalai tamil nadu
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை முடிந்தால் அண்ணா சாலை பக்கம் வரச் சொல்லுங்கள் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

இதுகுறித்து உதயநிதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: என்னை ஒருமையில் அண்ணாமலை பேசியிருக்கிறார். அவர்களது தரம் அதுதான். என் வீட்டில் போஸ்டர் ஒட்டுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். நான் வீட்டில்தான் இருப்பேன். தைரியமிருந்தால் அண்ணாமலையை அண்ணா சாலை பக்கம் வரச் சொல்லுங்கள்.

உதயநிதி, அண்ணாமலையின் தனிப்பட்ட பிரச்சினை இல்லை. கல்வி நிதி தொடர்பானது. நிதியை பெற்றுத் தர துப்பில்லாதவர்கள் பேசுகிறார்கள். தமிழகத்தின் நிதி உரிமையை திசை திருப்பவே இப்படி செய்கிறார்கள்.

தனியார் பள்ளிகளை யாராவது சட்டவிரோதமாக நடத்துகிறார்களா என்ன? மத்திய அரசிடம் போதிய அனுமதியை பெற்றுத்தானே நடத்துகிறார்கள். தனியார் பள்ளிகளில் யாராவது இலவச உணவையோ இலவச சீருடையையோ தருகிறார்களா என்ன?

மும்மொழி கொள்கை என்பது அரசுப் பள்ளியோடு தொடர்புடையது. உ.பி. கும்பமேளாவில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாஜக திணறி வருகிறது. காசியில் தமிழக வீரர்கள் சிக்கி வரும் சம்பவம் குறித்து இன்று காலை எனக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் தமிழகம் திரும்ப போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

More From
Prev
Next
English summary
Tamil nadu Deputy CM Udhayanidhi Stalin says that if Annamalai has any guts then ask him to come to Mount Road.
Read Entire Article