ARTICLE AD BOX
டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி அளவில் ஊழல் நடந்ததாக குற்றசாட்டு எழுந்து, தமிழ்நாடு டாஸ்மாக் அலுவலகத்தை பாஜகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முற்பட்டனர். இந்த விஷயத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட பல பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
அன்றைய நாளில் பாஜக, திமுக மக்களிடையே இரட்டை வேடம் போடுவதாக, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது. இந்த விவகாரம் குறித்து அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதையும் படிங்க: இன்னும் எத்தனை உயிர்கள்? நெல்லையில் நடந்த கொலை விவகாரம்; கடும் அண்ணாமலை கண்டனம்!
அண்ணாமலை டென்ஷன்
அப்போது பேசிய அண்ணாமலை, "வீட்டில் இருந்து அரசியல் செய்வோர் பாஜக குறித்து பேச வேண்டாம். புஸ்ஸி ஆனந்த் போன்றோர் எந்த தரத்தில் இருக்க வேண்டுமோ அங்கேயே இருந்துகொள்ளுங்கள். தேவையில்லாமல் எங்களை சீண்டினால் பின்விளைவை சந்திக்க நேரிடும்" என எச்சரித்தார்.
புஸ்ஸி ஆனந்த் கூல் பதில்
இந்நிலையில், சென்னை திருவான்மியூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த்-திடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசியவர், "மக்கள் சேவை செய்வது மட்டுமே எண்களின் நோக்கம்.
பிறருக்கு பதில் சொல்ல வேண்டும் என அவசியம் இல்லை. தளபதியின் வழியில் நாங்கள் செல்கிறோம். பிறரின் வழியில் நாங்கள் பயணிக்கவில்லை. தளபதியின் வழியில் மக்களுக்கான பயணத்தை மேற்கொள்கிறோம்" என பேசினார்.
இதையும் படிங்க: #Breaking: அண்ணாமலை கைது.. டாஸ்மாக் ஊழல் ரூ.40000 கோடி.. A1 குற்றவாளி முக ஸ்டாலின் - பரபரப்பு பேட்டி.! தமிழக அரசியலில் திடுக்.!