அண்ணாமலை, வானதி, தமிழிசை உள்ளிட்டோர் கைது - வீட்டுக் காவலில் பாஜக-வினர் | என்ன காரணம்?

3 hours ago
ARTICLE AD BOX

தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையின் முடிவில், ரூ.1000 கோடி அளவில் ஊழல் நடந்தது என குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து 17 ஆம் தேதி(இன்று) சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமையகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.

பாஜக நிர்வாகிகளை வீட்டுக் காவலில் வைக்கும் போலீஸ்

இந்நிலையில், சென்னை தியாகராய நகர் பகுதியில் வசித்து வரும் பாஜக பிரமுகர் வினோஜ் பி செல்வம் காலையில் கைது செய்யப்பட்டுள்ளார். பாஜக மாநில செயலாளர் வினோஜ் செல்வத்தின் ஒருங்கிணைப்பில் போராட்டம் நடத்த அண்ணாமலை உத்தரவிட்டு இருந்தார். மேலும் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு குவியும் பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்.

அதேபோல வானதி சீனிவாசன், போராட்டத்திற்கு கிளம்பிய தமிழிசை சௌந்தர்ராஜன் ஆகியாரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

"டாஸ்மாக் ஊழலை வெளிக்கொண்டு வருவதில் நாங்கள் சுணங்க மாட்டோம். மக்களுக்காக நாங்கள் போராடுவோம். இது ஜனநாயக நாடு எங்களை தடுக்க முடியாது" என்று தமிழிசை தெரிவித்திருக்கிறார்.

பாஜக நிர்வாகிகளை வீட்டுக் காவலில் வைக்கும் போலீஸ்

இந்நிலையில் டாஸ்மாக் ஊழல் புகார் தொடர்பான போராட்டத்திற்கு செல்லும் வழியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இதனைதொடர்ந்து செய்தியளர்களிடம் பேசிய அவர், "நானோ பாஜக நிர்வாகிகளோ பேசக் கூடாது என தமிழ்நாடு அரசு நினைக்கிறது. நாங்கள் பேசினால் உண்மைகள் வெளிவந்துவிடும் என்பதால் எங்களை கைது செய்கிறார்கள். தேதியை அறிவிக்காமல் போராட்டம் நடத்தினால் என்ன செய்வார்கள். தேவையெனில் முதல்வர் வீட்டையும் முற்றுகையிடுவோம்" என்று தெரிவித்திருக்கிறார்.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

Read Entire Article