அண்ணா பல்கலைகக்கழக வழக்கு ஞானசேகரன் – மார்ச் 10ஆம் தேதி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்!

3 hours ago
ARTICLE AD BOX

மார்ச் 10ஆம் தேதி ஞானசேகரன் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

அண்ணா பல்கலைகக்கழக வழக்கு ஞானசேகரன் - மார்ச் 10ஆம் தேதி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்!அண்ணா பல்கலைகக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்ட்டுள்ளார்.

அவர் மீது சிறப்பு புலனாய்வு குழுவினர் 112 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை சைதாப்பேட்டை 9 வது நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.  அதில் 190 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளது. நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஞானசேகரனுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. பென்டிரைவ் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று மதியம் மீண்டும் ஞானசேகரனை போலீசார் சைதாப்பேட்டை 9 வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரிடம் கையெழுத்து பெறப்பட்டது. வழக்கு விசாரணை சென்னை அல்லிக்குளம் வளாகத்தில் செயல்பட்டு வரும் மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது குறித்து ஞானசேகரனுக்கு நீதிமன்றம் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தது.

இதன்பிறகு ஞானசேகரனை போலீசார் பாதுகாப்போடு புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். அடுத்தக்கட்டமாக ஞானசேகரனை மார்ச் 10 ஆம் தேதி மகிளா நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆஜர்படுத்த உள்ளனர். அன்று வழக்கு விசாரணை தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Read Entire Article