ARTICLE AD BOX

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர்பாக பாகிஸ்தானில் தொடங்கிய நிலையில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் ஆல் அவுட் ஆன நிலையில் அதற்கு அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி அபாரமாக விளையாடி 42.3 ஓவர்களில் 4விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்நிலையில்
இந்த போட்டியின் மூலம் விராட் கோலி 3 சாதனை படைத்துள்ளார். அதாவது ஒரு நாள் போட்டிகளில் 14,000 ரன்களை கடந்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். இதற்கு முன்பாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் குமாரா சங்ககாரா ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை படைத்திருந்த நிலையில் தற்போது விராட் கோலியும் படைத்துள்ளார். மேலும் சச்சின் டெண்டுல்கர் 350 இன்னிங்சில் 14,000 ரன்களை கடந்த நிலையில் சங்ககாரா 378 இன்னிங்ஸில் 14000 ரன்களைக் கடந்தார். ஆனால் விராட் கோலி 287 இன்னிங்ஸில் 14,000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில் ஒரு நாள் தொடரில் அதிவேகமாக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார். அதன்படி 175 இன்னிங்ஸில் 8000 ரன்களைக் கடந்த விராட் கோலி 194 இன்னிங்க்ஸில் 9 ஆயிரம் ரன்களும், 205 இன்னிங்சில் 10,000 ரன்களும், 222 இன்னிங்ஸில் 11,000 ரன்களும், 242 இன்னிங்ஸில் 12,000 ரன்களும் 267 இன்னிங்ஸில் 13,000 ரன்களும், 287 இன்னிங்ஸில் 14,000 ரன்களும் கடந்துள்ளார். மேலும் சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடித்ததோடு ஒரு நாள் தொடர்களிலும் 51 வது சதத்தையும் பூர்த்தி செய்துள்ளார்.