அடேங்கப்பா.. ரூ.300 போதும்.. 45 நாள் வரை வேலிடிட்டி.. தினமும் 3ஜிபி டேட்டா.. அள்ளி தரும் BSNL திட்டங்கள்..

1 day ago
ARTICLE AD BOX

அடேங்கப்பா.. ரூ.300 போதும்.. 45 நாள் வரை வேலிடிட்டி.. தினமும் 3ஜிபி டேட்டா.. அள்ளி தரும் BSNL திட்டங்கள்..

News
oi-Prakash S
| Published: Wednesday, February 26, 2025, 11:44 [IST]

தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகள் வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தில் மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்கள் கிடைக்கிறது. எனவே தான் தற்போது பலர் பிஎஸ்என்எல் திட்டத்தில் ரீசார்ஜ் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ரூ.300-க்குள் அதிக நன்மைகளை வழங்கும் மூன்று அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். இப்போது அந்த மூன்று திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

அடேங்கப்பா.. ரூ.300 போதும்.. அள்ளி தரும் BSNL திட்டங்கள்..

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.215 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 215 Prepaid Plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான ப்ரீபெய்ட் திட்டம். எனவே பிஎஸ்என்எல் ரூ.215 ப்ரீபெய்ட் திட்டத்தில் தேர்வு செய்தால் மொத்தம் 60ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது இந்த ரூ.215 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர பல அசத்தலான நன்மைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

அதன்படி சேலஞ்சர் அரினா (Challenger Arena), ஹார்டி கேம்ஸ் (Hardy Games), கேம்ஆன் (Gameon), லிஸ்ட்ன் பாட்காஸ்ட் (Lystn Podcast), ஜிங் மியூசிக் (Zing Music), ஆஸ்ட்ரோடெல் (Astrotell), வாவ் என்டேர்டைன்மெண்ட் (WOW Entertainment) உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்த பிஎஸ்என்எல் ரூ.215 திட்டத்தில் வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 249 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 45 நாட்கள் ஆகும். எனவே இந்த பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க.

மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.

பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 299 Prepaid Plan) தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடேங்கப்பா.. ரூ.300 போதும்.. அள்ளி தரும் BSNL திட்டங்கள்..

அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் இதில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். பின்பு இந்த பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும் என்பதை கவனத்தில் கொள்க.

தற்போது இந்தியாவில் ஒரு சில இடங்களில் 4ஜி சேவையை வழங்கி உள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். கூடிய விரைவில் நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்க உள்ளது இந்நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனத்தின் 4ஜி சேவை இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Best Mobiles in India
தொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about:
English summary
BSNL Rs 215, Rs 249, Rs 299 plans offering high data and unlimited calls: check details here
Read Entire Article