அடேங்கப்பா…! மகா கும்பமேளாவால் ரூ.3,00,000 கோடி வருவாய்… முதல்வர் யோகி ஆதித்யநாத் தகவல்…!!!

3 days ago
ARTICLE AD BOX

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியில் கடந்த மாதம் 13 ஆம் தேதி மகா கும்பமேளா தொடங்கிய நிலையில் இந்த மாதம் 26 ஆம் தேதியோடு நிறைவடைகிறது. இந்த நிகழ்ச்சி மொத்தம் 45 நாட்கள் வரை நடைபெறும் நிலையில் இதுவரையில் 55 கோடிக்கும் அதிகமானோர் மகா கும்பமேளாவில் புனித நீராடியுள்ளனர். மகா கும்பமேளா விரைவில் நிறைவடைவதால் தற்போது அங்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் தற்போது சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சி எம்எல்ஏ எழுப்பிய ஒரு கேள்விக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் பதில் அளித்தார்.

அப்போது மகா கும்பமேளாவில் இதுவரை கிடைத்த வருமானம் குறித்து கூறினார். அதன்படி 3 லட்சம் கோடி வரை வருமானம் கிடைத்துள்ளதால் மாநிலத்தின் வருவாய் உயர்ந்துள்ளதாக யோகி ஆதித்யநாத் கூறினார். இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாக கூறிய அவர் உத்திரபிரதேச மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ஒரு ட்ரில்லியன் டாலராக உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார். மேலும் பிரதமர் மோடியின் ஆட்சியில் கடந்த 10 வருடங்களில் 25 கோடிக்கு அதிகமான மக்களை வறுமைக்கோட்டில் இருந்து மீட்டுள்ளோம் என்றும் கூறினார்.

Read Entire Article