அடேங்கப்பா.. 62 கம்பெனி.. சிறிய அளவில் தொடங்கி உலகத்தை கலக்கும் இந்திய நிறுவனங்கள்..!

18 hours ago
ARTICLE AD BOX
  செய்திகள்

அடேங்கப்பா.. 62 கம்பெனி.. சிறிய அளவில் தொடங்கி உலகத்தை கலக்கும் இந்திய நிறுவனங்கள்..!

News

இன்று ஆலமரம் போல் பெரிய நிறுவனங்களாக வளர்ச்சி கண்டு இருக்கும் நிறுவனங்கள் பெரும்பாலும் முதலில் சிறிய அளவிலான நிறுவனங்களாகத்தான் தொடங்கப்பட்டு இருக்கும். யாரும் ஒரே நாளில் பெரிய ஆளாகி விட முடியாது அது போல் இன்றைக்கு தொழில் தொடங்கி அடுத்த சில மாதங்களில் பெரிய நிறுவனமாக உருவெடுக்க முடியாது. படிப்படியாகத்தான் நிறுவனங்கள் வளர்ச்சி கண்டு சர்வதேச அளவில் பெரிய நிறுவனங்களாக மாறும். அப்படி ஆரம்பத்தில் சிறிதாக தொடங்கப்பட்டு இன்று சர்வதேச அளவில் பெரிய நிறுவனங்களாக பல இந்திய நிறுவனங்களாக அசூர வளர்ச்சி கண்டுள்ளன. உதாரணமாக இன்போசிஸ் நிறுவனத்தை நாம் சொல்லலாம்.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தை தெரியாதவர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் இன்று நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக வலம் வரும் இன்ஃபோசிஸ் எப்படி தொடங்கப்பட்டது என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 1981ம் ஆண்டு என்.ஆர். நாராயண மூர்த்தி மற்றும் ஆறு பொறியாளர்களால் வெறும் 250 டாலருடன் அதாவது இந்திய மதிப்புக்கு சுமார் ரூ.21 ஆயிரத்துடன் இன்ஃபோசிஸ் நிறுவனம் நிறுவப்பட்டது. இந்நிறுவனத்துக்கு நம் நாட்டில் மட்டுமல்ல பல நாடுகளில் ஏராளமான அலுவலகங்கள் மற்றும் மேம்பாட்டு மையங்களுடன் குறிப்பிடத்தக்க உலகளாவிய இருப்பை கொண்டுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்ஃபோசிஸ் நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.6.55 லட்சம் கோடியாக உள்ளது.

அடேங்கப்பா.. 62 கம்பெனி.. சிறிய அளவில் தொடங்கி உலகத்தை கலக்கும் இந்திய நிறுவனங்கள்..!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் 2010ம் ஆண்டிலே பேடிஎம் நிறுவனம் அதற்கான விதையை ஆழமாக ஊன்றி விட்டது. அந்த ஆண்டில் பேடிஎம் செயலி அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் நம் நாட்டில் ரொக்கமில்லாத பரிவர்த்தனை டிரெண்ட் ஆரம்பித்தது. தற்போது பேடிஎம் இந்திய நுகர்வோரின் பிரிக்க முடியாத பகுதியாக மாறி விட்டது. மேலும் இந்தியாவின் மிகப்பெரிய மொபைல் பேமெண்ட்ஸ் நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

2014ல் உணவு பொருட்களை டெலிவரி செய்யும் ஆன்லைன் நிறுவனமான ஸ்விக்கி நிறுவனம் தொடங்கப்பட்டது. இன்று 500க்கும் மேற்பட்ட நகரங்களில் உணவு பொருட்கள் டெலிவரி சேவைகளை மேற்கொண்டு வருகிறது. மும்பை பங்குச் சந்தையில் ஸ்விக்கி நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.80,646 கோடியாக உள்ளது. சில்லரை விற்பனை பிராண்டான மீஷோ, வணிக உரிமையாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை நேரடியாக அனுமதிக்கும் ஒரு மலிவு விலை ஆன்லைன் நிறுவனமாக அறியப்படுகிறது. மீஷோ செயலில் குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கும் என்ற பெயர் மக்களிடம் ஏற்பட்டு விட்டது. இந்த காரணத்திற்காக மக்களின் விருப்பமான நிறுவனமாக மீஷோ உருவெடுத்துள்ளது.

நாட்டின் மூன்றாவது பெரிய ஐடி நிறுவனமான உருவெடுத்துள்ள எச்சிஎல் டெக்னாலஜிஸ், 1991ம் ஆண்டில் எச்சிஎல் எண்டர்பிரைஸின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவாக தொடங்கியது. இப்போது 31 நாடுகளில் அலுவலகங்களை கொண்ட 4500 கோடி டாலர் மதிப்பிலான சர்வதேச தொழில்நுட்ப நிறுவனமாக உள்ளது. மும்பை பங்குச் சந்தையில் எச்சிஎல் டெக்னாலஜிஸ் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.4.16 லட்சம் கோடியாக உள்ளது.

சிறிய அளவில் தொடங்கப்பட்டு இன்று ஆலமரம் போல் பெரிதாக உயர்ந்துள்ள 62 நிறுவனங்களின் பெயர்கள் மற்றும் அந்த நிறுவனங்களை தொடங்கியவர்களின் பெயர்கள் இதோ.

1. பிளிப்கார்ட் சச்சின் பன்சால்,பின்னி பன்சால்
2.பேடிஎம் விஜய் சேகர் சர்மா
3. பார்ம் ஈஸி தர்மில் ஷெத்
4. ஓலா பவிஷ் அகர்வால் அங்கித் பதி
5. சோமேட்டோ தீபிந்தர் கோயல்,பங்கஜ் சத்தா
6. பைஜூ பைஜூ ரவீந்திரன்
7. ஸ்விக்கி ஸ்ரீஹர்ஷா,நந்தன் ரெட்டி, ராகுல் ஜெய்மினி
8. ஓயா ரூம்ஸ் ரிதேஷ் அகர்வால்
9. ரேஸார்பே ஹர்ஷில் மாத்தூர், ஷஷாங்க் குமார்
10. கியுர்ஃபிட் முகேஷ் பன்சால்,அங்கித் நகோரி,
11. உதான் அமோத் மாளவியா,வைபவ் குப்தா,சுஜீத் குமார்,
12. பாலிசிபஜார் யாஷிஷ் தஹியா,அலோக் பன்சால்,அவனீஷ் நிர்ஜார்
13. ஃப்ரெஷ்வொர்க்ஸ் கிரீஷ் மாத்ருபூதம், ஷான் கிருஷ்ணசாமி
14. லென்ஸ்கார்ட் பெயுஷ் பன்சால்,அமித் சவுத்ரி, சுமீத் கபாஹி
15. ட்ரீம் 11 ஹர்ஷ் ஜெயின்,பவித் ஷெத்
16. டெலிவரி சாஹில் பருவா,மோஹித் டாண்டன்,சூரஜ் சஹாரன்
17. பிக்பாஸ்கெட் விஎஸ் சுதாகர்,ஹரிமேனன்.விபுல் பரேக், அபினய் சவுதாரி, வி.ரமேஷ்
18. நைகா ஃபால்குனி நாயர்
19. அர்பன் கிளாப் அபிராஜ் பால், ராகவ் சந்திரா,வருண் கைதான்
20. போன்பே சமீர் நிகம்,ராகுல் சாரி,பர்ஜின் என்ஜினியர்
21. ரீபெல் ஃபுட்ஸ் ஜெயதீப் பர்மன், கல்லோல் பானர்ஜி
22. பிளாக்பக் ராஜேஷ் யாபாஜி.சாணக்யா ஹெசர்கட்டா,ராமசுப்பிரமணியம் பி,
23. பவுன்ஸ் விவேகானந்தர் ஹல்லேகெரே,அனில் ஜி,வருண் அக்னி
24. ரிவிகோ தீபக் கர்க்,கசல் கல்ரா
25.அன்அகாடமி கௌரவ் முன்ஜால்,ரோமன் சைனி,ஹேமேஷ் சிங்
26. மீஷோ விதித் ஆரே,சஞ்சீவ் பர்ன்வால்
27. லிவ்ஸ்பேஸ் அனுஜ் ஸ்ரீவஸ்தவா, ரமாகாந்த் சர்மா
28. அக்கோ ஜெனரல் இன்ஸ்யூரன்ஸ் வருண் துவா
29. கார்ஸ்24 விக்ரம் சோப்ரா, மெகுல் அகர்வால், கஜேந்திர ஜாங்கிட்,ருசித் அகர்வால்
30. டெய்லிஹண்ட் வீரேந்திர குப்தா, உமேஷ் குல்கர்னி
31. ஷேர்சாட் அங்குஷ் சச்தேவா,ஃபரித் அஹ்சன்,பானுசிங்
32. க்ரோஃபர்ஸ் அல்பிந்தர் திண்ட்சா,சவுரப் குமார்
33. மொபிக்விக் பிபின் ப்ரீத் சிங், உபாசனா டக்கு
34. ஹைக் கவின் பார்தி மிட்டல்
35. குயிக்ர் பிரனய் சுலேட், ஜிப் தாமஸ்
36. மைகேட் விஜய் அரிசெட்டி, அபிஷேக் குமார், ஷ்ரேயன்ஸ் டகா
37. நோபுரோக்கர் அமித் குமார் அகர்வால், அகில் குப்தா,சவுரவ் கர்க்
38. டன்சோ கபீர் பிஸ்வாஸ், அங்கூர் அகர்வால், தல்வீர் சூரி,முகுந்த் ஜா
39. இன்ஃப்ரா மார்க்கெட் சவுவிக் சென்குப்தா,ஆகாஷ் கோயங்கா
40. ஜெரோதா நிதின் காமத், நிகில் காமத்
41. போட் அமன் குப்தா, சமீர் மேத்தா
42. பாரத்பே அஷ்னீர் குரோவர், ஷஷ்வத் நக்ரானி
43. CRED குணால் ஷா
44. அப்கிராட் ரோனி ஸ்க்ரூவாலா, மயங்க் குமார், பால்குன் கொம்பள்ளி, ரவிஜோத் சுக்
45. 1எம்ஜி பிரசாந்த் டாண்டன்,கவுரவ் அகர்வால்,விகாஸ் சவுகான்
46. லிசியஸ் அபய் ஹஞ்சரா, விவேக் குப்தா
47. க்ரோ ஹர்ஷ் ஜெயின், லலித் கேஷ்ரே
48. போர்சோ மைக் அலெக்ஸாண்ட் ரோவ்ஸ்கி
49. ஜோஹோ ஸ்ரீதர் வேம்பு, டோனி தாமஸ்
50. ராபிடோ அரவிந்த் சங்கா, பவன் குண்டுபள்ளி,ரிஷிகேஷ் எஸ்ஆர்
51. ப்ளூஸ்மார்ட் மொபிலிட்டி அன்மோல் சிங் ஜக்கி, புனித் கே கோயல்
52. மைந்த்ரா முகேஷ் பன்சால், அசுதோஷ் லாவானியா,வினீத் சக்சேனா
53. சுகர் காஸ்மேடிக்ஸ் வினிதா சிங், கவுசிக் முகர்ஜி
54. இன்மொபி நவீன் திவாரி, அமித்குப்தா, மோஹித் சக்சேனா, அபய் சிங்கால்
55. இந்தியாஸ்டாக் நந்தன் நிலேகனி
56. கார்தேக்கோ அமித் ஜெயின், அனுராக் ஜெயின்
57. முசிக்மா தீரஜ் ராஜாராம்
58. பிலிங்க்இட் அல்பிண்டர் திண்ட்சா
59. பிராக்டோ ஷஷாங்க் என்டி, அபினவ் லால்
60. இந்தியாமார்ட் தினேஷ் அகர்வால், பிரிஜேஷ் அகர்வால்
61. ஹெல்த்கார்ட் சமீர் மகேஸ்வரி, பிரசாந்த் டாண்டன்
62. மேக்மை டிரிப் தீப் கல்ரா

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

Read Entire Article