ARTICLE AD BOX
கமலுடன் தக் லைஃப், சொந்த தயாரிப்பில் எஸ்டிஆர் 50ன்னு பல படங்கள் நடிகர் சிம்புக்கு இனி வரப் போகின்றன. அந்த வகையில் அவரைப் பற்றி பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
அந்த மேஜிக்: சிம்பு திரையில் சிறந்த நடிகர். நிஜத்துல நடிக்கத் தெரியல. காதல் தோல்வி, பணத்துல பிரச்சனைகள், எத்தனையோ சிக்கல்கள், படத்துல தோல்வின்னு இருந்துருக்கு. ஆனா அதை எல்லாம் தாண்டி இன்னைக்கும் டிராவல் பண்ணிக்கிட்டு இருக்காரு. அந்த மேஜிக் எப்படின்னு தெரியல.
அடுத்த விஜய் எஸ்டிஆர்: துப்பாக்கியை விஜய் கையில கொடுத்த உடனே அடுத்த விஜய் சிவகார்த்திகேயன்னு சொல்றாங்க. உண்மையே கிடையாது. அதுக்குத் தகுதியான ஆள் எஸ்டிஆர்தான். அடுத்த விஜய் இடத்தை நிரப்பப் போவது அவர்தான். ஆனா கரெக்டான பார்முக்கு வரணும்.
ஏன் கொண்டாடுறாங்க?: மணிரத்னம் மாதிரி பெரிய ஆளுமை உள்ள இயக்குனர்கள் ஏன் சிம்புவைத் திரும்பத் திரும்பத் தேர்ந்தெடுக்குறாங்க. செக்கச்செவந்த வானம் படத்துல அரவிந்தசாமி, விஜய்சேதுபதி இவங்க எல்லாம் சேர்ந்து நடிக்கும்போது சிம்புவை ஏன் ஹீரோவா போடுறாங்க? நாலு ஹீரோ கூட நடிக்கும்போது சிம்புவை ஏன் கொண்டாடுறாங்கன்னு எல்லாம் கேள்வி எழுப்பி அதிர வைக்கிறார் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு . அவர் வேறு என்னவெல்லாம் சொல்றாருன்னு பாருங்க.
இத்தனை பிரச்சனைகள்: எஸ்டிஆர் வந்து ரொம்ப சிம்பிளா கேஷூவலா சொல்லணும்னா அவர் கெத்து. அவரைப் பட்டம் வச்சிக் கொண்டாடல என்றாலும் அவரை எல்லாருக்கும் பிடிக்குது. பன்முகக் கலைஞரின் மகனா இருந்தும் அவருக்கு இத்தனை பிரச்சனைகள். இத்தனை சிக்கல்கள். அப்படி வந்தாலும் இன்னைக்கும் கொண்டாடுறாங்கன்னா என்னம்மோ அவரிடம் இருக்கு.
மைனஸ் தான: எஸ்டிஆர் கரெக்டா ஒரு பார்ம்ல இருந்தாருன்னா வருஷத்துக்கு ஒரு படத்துல நடிச்சா போதும். அவருக்கிட்ட நேர்மை இருக்கு. வெளிப்படையான மனிதர். யதார்த்தமானவர். அப்படி இருந்தா இன்னைக்கு இருக்குற சொசைட்டில மைனஸ்தான. எல்லா திறமையும் அவர்கிட்ட இருக்கு.
விண்ணைத்தாண்டி வருவாயா: நிறைய பேரு விஜய் 69க்கு அப்புறம் போயிட்டா அந்த வெற்றிடத்தை யார் நிரப்புவா? எஸ்.கே.னு சொல்றாங்க. சூர்யா, தனுஷ் எல்லாம் வருவார்களான்னு சொல்றாங்க. ஆனா அது கிடையாது. தகுதியான ஆள் எஸ்டிஆர்.தான். அவரு மேஜிக் பண்றாரு. விண்ணைத்தாண்டி வருவாயா மாதிரி எந்த ஹீரோவாவது நடிக்க முடியுமா? ஆனால் தடுமாற்றங்கள் ஏன்? பல ஏமாற்றங்கள். அதனால அப்பப்ப மனநிலை தடுமாற்றம் வந்துருக்கு. அது கொஞ்சம் பேலன்ஸ் இல்லாம இருக்கு. அதைப் புரிஞ்சி சரியா செயல்பட்டா போதும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.