தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டுமின்றி, வில்லனாகவும், கேமியோ ரோலிலும் நடித்துள்ளார். கடந்த ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் மேரி கிறிஸ்துமஸ், மகாராஜா மற்றும் விடுதலை பார்ட் 2 ஆகிய படங்கள் வெளியானது. இதில், மகாராஜா படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது. சீனாவிலும் மகாராஜா படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது. கடந்த 2024 ஆம் ஆண்டு திரைக்கு வந்து அதிக வசூல் குவித்த படங்களில் இந்தப் படமும் இடம் பெற்றுள்ளது. இந்த ஆண்டு வரிசையாக ஏஸ், டிரைன் மற்றும் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான பெயரிடப்படாத படம் என்று 3 படங்களி நடித்து முடித்துள்ளார்.

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சைலண்டாகவே நடந்து முடிந்துள்ளது. இந்த படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் உருவாகும் 96 படத்தில் நடிக்க இருக்கிறார். இது வழக்கமான காதல் கதையாக இல்லாமல் புதுவிதமான கதையை மைய்ப்படுத்திய படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்தப் படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்க இருக்கிறார்.

இந்தப் படத்தில் விஜய் செதுபதிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். ஏற்கனவே 96 படத்தின் முதல் பாகத்தில் இவர்களது கெமிஸ்டரி நன்றாக ஒர்க் அவுட்டான நிலையில் இப்போது 2ஆவது பாகமும் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் தான் புதுச்சேரியில் தற்காப்பு கலை கற்று வருகிறார். புதுச்சேரியில் உள்ள பூரணங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் கண்ணன். இவர் நடத்தி வரும் சிலம்ப குருகுலத்தில் தான் விஜய் சேதுபதி தற்போது தற்காப்பு கலைகளை கற்று வருகிறாராம். இந்த குருகுலத்தில் யோகா, சிலம்பம் உள்ளிட்ட பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. தனது அடுத்த படத்திற்காக தான் விஜய் சேதுபதி இப்போது தற்காப்பு கலைகள் கற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.