ARTICLE AD BOX

ஜேம்ஸ்பாண்ட் 007 வரிசையில் 60 ஆண்டுகளாக துப்பறியும் ஆக்ஷன் படங்கள் வந்து கொண்டிருக்கிறது. யாராலும் செய்ய முடியாத செயலை செய்து முடிக்கும் துப்பறிவாளர்,ஆக்ஷன், ரொமான்ஸ் ஹீரோ தான் ஜேம்ஸ்பாண்ட் 007. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஜேம்ஸ்பாண்ட் ஆக வெவ்வேறு நடிகர்கள் நடித்து வந்துள்ளனர். இது வரையிலும் 7 பேர் பாண்ட் ஆக நடித்துள்ளனர். ஷான் கானரி, டேவிட் நிவேன், ஜார்ஜ் லேசன்பி, ராஜர் மூர், டிமோத்தி டால்டன்,பியர்ஸ் ப்ராஸ்னன் மற்றும் டேனியல் க்ரேக் ஆகியோர் நடிப்பில் இது வரையிலும் 27 ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வெளி வந்துள்ளன. முதல் படமான டாக்டர் நோ 1962லும் 27வது படமான நோ டைம் டு டை 2021லும் வெளியானது.
தற்போது ஜேம்ஸ்பாண்ட் படங்களின் உரிமத்தை அமேசான எம்.ஜி,எம் நிறுவனம் பெற்றுள்ளது. அமேசான் குழுமத்தின் தலைவர் ஜெஃப் பெசோஸ் அடுத்த ஜேம்ஸ்பாண்ட் 007 ஆக எந்த நடிகரை விரும்புகிறீர்கள் என்று சமூகத்தளத்தில் கேட்டுள்ளார். ஹென்றி கேவில், ஜேம்ஸ் மெக்அவாய், டாம் க்ரூஸ் ஆகியோருக்கு ஆதரவுகள் குவிந்து வருகிறது. முந்தைய பாண்ட் டேனியல் க்ரேக் தேர்வின் போதே ஹென்றி கேவில் லும் பட்டியலில் இருந்தார். அப்போது அவர் மிகவும் வயது குறைந்தவர் என்ற காரணத்தால் டேனியல் க்ரேக் க்கு வாய்ப்பு கிடைத்தது. இப்போது ஹென்றி கேவில் க்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
யார் அடுத்த பாண்ட் என்ற முடிவு அமேசான் குழுமத் தலைவர் ஜெஃப் ஃபெசோஸ் கையில் தான் உள்ளது
Who’d you pick as the next Bond? pic.twitter.com/u7nBaRROlf
— Jeff Bezos (@JeffBezos) February 20, 2025