அடுத்த கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெறும்! - ரேவந்த் ரெட்டி அறிவிப்பு

8 hours ago
ARTICLE AD BOX

நியாயமான தொகுதி வரையறையை வலியுறுத்தி அடுத்த கூட்டம் ஹைதராபாத்தில் நடத்தப்படும் என தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தக் கூட்டத்தில் கேரள முதல்வா் பினராயி விஜயன், பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி , கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இதையும் படிக்க | நாங்கள் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல; ஆனால்...! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு

கூட்டத்தில் பேசிய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி,

"இது பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டுவதற்கான கூட்டம். மக்கள்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி சிறப்பாக செயல்பட்டதற்கான தண்டனையே தொகுதி மறுவரையறை. கட்சி வேறுபாடுகளைக் களைந்து ஒன்றாக இணைந்து இதை எதிர்த்துப் போராடுவோம். தில்லியிலும் இதற்குரிய நடவடிக்கைகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும்.

பாஜக நம்மை பேசவே அனுமதிப்பதில்லை. அவர்கள் நினைப்பதையே முடிவாக எடுக்கிறார்கள். எனவே மத்திய பாஜக அரசின் இந்த முடிவுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து குரல் கொடுப்போம்.

நியாயமான தொகுதி வரையறையை வலியுறுத்தி அடுத்த கூட்டம் ஹைதராபாத்தில் நடத்தப்படும்" என்று பேசினார்.

Read Entire Article