அடுக்குமாடி குடியிருப்பு? தனி வீடு? - எது சிறந்தது?

9 hours ago
ARTICLE AD BOX

சொந்த வீடு கட்டுவது என்பது ஒவ்வொரு தனிநபரின் கனவாக இருக்கலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, விலைவாசி உயர்வு மற்றும் இட நெருக்கடி காரணமாக வீட்டை சொந்தமாக்குவது சாத்தியமற்றதாகி வருகிறது. குறிப்பாக, பெருநகரங்களில், தனி வீடுகளை விட அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகமாக விரும்பப்படுகின்றன.

மக்கள் தங்கள் பொருளாதார நடவடிக்கைகள், நிலத்தின் விலை மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்க வேண்டிய நகர்ப்புற அம்சங்களுடன் மாறும்போது அடுக்குமாடி வீடுகளை தேர்ந்தெடுக்கிறார்கள்.

இடம், வசதிகள், பராமரிப்பு, சமூகம் மற்றும் வாழ்க்கை முறை போன்ற பல்வேறு கூறுகளைக் கருத்தில் கொண்டு, வாங்குபவர்கள் தனி வீடு மற்றும் ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு இடையே மிகவும் பொருத்தமான வீட்டைத் தேர்வு செய்யலாம்.

ஒரு தனி வீடு வாங்குவதால் உண்டாகும் நன்மைகள்:

தனி வீடுகள் பொதுவாக ஒரு குடும்பம் அல்லது குடும்பத்தினரால் சொந்தமாக வைக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்படுகின்றன.

இதனால், அவர்கள் அதன் சுற்றுப்புறங்களை அவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப தனிப்பயனாக்க சுதந்திரம் கிடைக்கிறது. தங்கள் இஷ்டத்திறகு எப்படி வேண்டுமானாலும் எதையும் அமைத்து கொள்ளலாம். எத்தனை பேர் வீட்டிற்கு விருந்தாளியாக வந்தாலும் adjust செய்து கொள்ளலாம். இந்த வசதியை நீங்கள் விரும்பினால், நீஙகள் தாராளமாக தனி வீடு கட்டலாம்.

தனி வீடு கட்டுவதால் உண்டாகும் தீமைகள்:

இந்நாட்களில் நிலத்தின் விலையும் அதிகம். அதைத் தவிர கட்டிட பொருட்களின் விலை எக்கசக்கம். வீடு கட்டிய பிறகு maintenance செய்வதற்கு செலவு அதிகமாகும். வீட்டை சுற்றி நான்கு பக்கமும் செய்ய வேண்டும். எங்கேயாவது வெளியூருக்கு சென்றால் பாதுகாப்பிற்கு யாரையாவது வைத்து விட்டுத்தான் போக முடியும்.

நீண்ட நாள் வீடு பூட்டபட்டிருந்தால் திருடு போய் விடும். இவை எல்லாவற்றையும் விட முக்கியமான பிரச்சினை என்னவென்றால் தனிப்பட்ட வீடு கட்டும் போது வங்கியில் லோன் கிடைப்பது மிகவும் கடினம். ஒவ்வொரு லெவலும் முடிந்த பிறகு ஆய்வாளர்கள் வந்து பார்த்த பிறகே அடுத்த step க்கு பணத்தை sanction செயவார்கள்.

அடுக்குமாடி குடியிருப்பை வாங்குவதால் உண்டாகும் நன்மைகள்:

இன்றைய காலகட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் மிகவும் பிரபலமான குடியிருப்பு வடிவங்களில் ஒன்றாக மாறிவிட்டன. நவீன கால வாழ்க்கையின் பலனை வழங்க அடுக்குமாடி குடியிருப்புகள் பல்வேறு வசதிகளுடன் வருகின்றன.

அடுக்குமாடி குடியிருப்புகள் பொதுவாக டெவலப்பர் வழங்குவதைப் பொறுத்து பரந்த அளவிலான வசதிகளைக் கொண்டுள்ளன. பல்வேறு டெவலப்பர்கள் கிளப்ஹவுஸ், ஜிம், நீச்சல் குளம், மற்றும் குழந்தைகளுக்கான பிரத்யேக விளையாட்டுப் பகுதி போன்ற வசதிகளை வழங்குகிறார்கள். அடுக்குமாடி குடியிருப்புகளின் வசதிகள் டெவலப்பர்களால் முன்கூட்டியே வரையறுக்கப்படுவதால், நீங்கள் பொதுவாக இதில் எந்தப் பங்கையும் வகிக்க முடியாது. சில அடுக்கு மாடி குடியிருப்புகளில் எந்த வசதியும் இல்லாமல் சிறியதாக இருக்கும். குறைந்த பட்ஜெட்கார்களுக்கு ஏற்றதாக அது இருக்கும்.

அடுக்குமாடி குடியிருப்புகளில் தனிப்பட்ட maintenance செய்வதற்கான அவசியமில்லை. மேலும் பகிரப்பட்டு செய்வதால் செலவும் அதிகமாக இருக்காது.

எங்கேயாவது வெளியூர் செல்ல வேண்டியிருந்தால் பிரச்சினையே இருக்காது. Flat ல் security வசதி இருப்பதால் பயமில்லை.

அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்கத் தேவையான loanஐ பெற, சம்மந்தபட்ட builders தானே அதை ஏற்பாடு செய்து விடுவார்கள்.

இதையும் படியுங்கள்:
12 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வருமான வரி விலக்கு... இப்போ சொந்த வீடு வாங்கலாமா?
Apartment vs Private house

அடுக்குமாடி குடியிருப்புகளில் உண்டாகும் தீமைகள்:

தனி வீடுகளுடன் ஒப்பிடும்போது ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனிப்பட்ட விருப்பங்களை பூர்த்தி செய்வது குறைவாக இருக்கலாம். நாம் நினைத்தபடி எதையும் மாற்றி அமைக்க இயலாது. ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் போது அண்டை வீட்டிலிருந்து வரும் சத்தம் நமக்கு தொந்தரவாக இருக்கலாம். ஏனென்றால் சுவர்கள் மற்றும் தரைகள் மற்ற குடியிருப்பாளர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. மேலும் நம் வீட்டிற்கு விருந்தாளிகள் அதிகமாக வந்தால் flatல் சமாளிக்க இயலாது. தண்ணீர் மின்சாரம் போன்ற பிரச்சினைகள் அதிகமாக இருக்கும்.

முடிவாக, எல்லாவற்றையும் ஆய்ந்த பிறகு இரண்டிலும் நன்மை தீமை இரண்டும் இருக்கிறது. உங்களிடம் தேவையான பணம் இருந்தால் நீங்கள் தனி வீட்டை தேர்ந்தெடுக்கலாம். அப்படி உங்களிடம் தேவையான பட்ஜெட் இல்லை என்ற பட்சத்தில் flatஐ தேர்ந்தெடுப்பதுதான் சரியாக இருக்கும். Flat குறைந்த பணத்திலும் கிடைக்கும். Loan எடுக்க வேண்டி இருந்தாலும் கடினம் இருக்காது.

ஆகவே உங்களின் பொருளாதார சூழ்நிலை, குடும்பத்தின் சூழ்நிலை, நீங்கள் இருக்கும் இடத்தின் சூழ்நிலை இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு எது better ஆக இருக்கும் என்று முடிவு செய்து வாங்கவும்!

இதையும் படியுங்கள்:
வீடு மாறும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டியவை!
Apartment vs Private house
Read Entire Article