ARTICLE AD BOX
அடமானப் பத்திரம் வைத்து கடன் வாங்கலாமா? எந்த பத்திரங்களைக் கொண்டு கடன் வாங்கலாம்?
சென்னை: அடமானப் பத்திரம் வைத்து கடன் வாங்கலாமா, எத்தகைய பத்திரங்களைக் கொண்டு கடன் வாங்கலாம்? என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து வெங்கடராமன் ராமசுப்ரமணியன் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: கண்டிப்பாக கடன் வாங்க வேண்டுமெனில், அடமானப் பத்திரம் வைத்து கடன் வாங்கலாம்.

கடன்களில் இரண்டு வகைகள் உண்டு.
1. அடமானம் உள்ள கடன்கள் (secured loans) - இத்தகைய கடன்களில் பொருள் அடமானமாக வைக்கப்படுகிறது. ஒரு வேளை கடன் அடைக்கப்படாவிட்டால், அடமானப் பொருளைக் கொண்டு வங்கி கடன் தொகையை மீட்க முயலும். இதில் வங்கிக்கு பாதுகாப்பு அதிகமாதலால், வட்டி விகிதம் குறைவு.
2. அடமானம் அற்ற கடன்கள் (unsecured loans) - இத்தகைய கடன்களில் அடமானப் பொருள் கிடையாது. ஒரு வேளை கடன் அடைக்கப்படாவிட்டால், வங்கியால் கடனை மீட்பது கடினம். கடன்காரரின் மற்ற சொத்துக்கள் மூலம் மீட்க முயலலாம். இதில் வங்கிக்கு பாதுகாப்பு குறைவாதலால், வட்டி விகிதம் அதிகம்.
அடமானக் கடன்களில் பல வகைகள் உண்டு.
உதாரணமாக, தங்க நகைக் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன், வீட்டுப் பத்திரம், தேசிய சேமிப்புப் பத்திரம், பரஸ்பர நிதி பத்திரம், வைப்பு நிதி பத்திரம், பங்கு பத்திரம் போன்றவை
எத்தகைய பத்திரங்களைக் கொண்டு கடன் வாங்கலாம் ?
- கிசான் விகாஸ் பத்திரம்
- தேசிய சேமிப்புப் பத்திரம்
- பாரத ரிஸர்வ் வங்கி வெளியிடும் பத்திரங்கள்
- வைப்பு நிதி பத்திரம்
- அரசாங்கத்தின் தங்கப் பத்திரங்கள்
- ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்கள்
- கடன் பத்திரங்கள்
- பரஸ்பர நிதி முதலீட்டுப் பத்திரங்கள்
- பங்குச் சந்தை முதலீடு சார்ந்த பத்திரங்கள்
- வீடு, நிலம் சார்ந்த பத்திரங்கள்
- இன்னும் பல வகைப் பத்திரங்கள்
கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நலம். கடன் வாங்கியே தீர வேண்டுமென்றால், அடமானம் சார்ந்த கடன்களை வாங்கலாம். அவற்றில் வட்டி விகிதம் குறைவு. அடமானப் பத்திரங்களை வைத்து கடன் வாங்குவதன் மூலம், குறைவாக வட்டி செலுத்துவதால், கடன் பளு குறைகிறது. கடன் வாங்கிய பின்னர், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் கடனை அடைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- அந்தப்புரம் அம்பலம்.. நடிகை ராதாவுக்காக மோதிய 2 ஹீரோ.. பல்லாயிரம் கோடி சொத்துக்கு சொந்தக்காரி? நிஜமா
- மகிழ்ச்சியில் நெப்போலியன் குடும்பம்.. மகன், மருமகளுக்கு செம வரவேற்பு.. நெகிழ்ச்சியான பதிவு
- விஜய் வித்யாஸ்ரம்.. நடிகர் விஜய் நடத்தும் சிபிஎஸ்சி பள்ளி பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? அண்ணாமலை
- உதயம் தியேட்டர் வாசலில் படுத்த பிரபல நடிகை அஞ்சலி.. சென்னை ஜவுளிக்கடையில் சேல்ஸ் கேர்ள்? ஆச்சரியம்
- நான் செய்த தப்பு வினையா போச்சு..! அப்பாவை பிணமா தான் பார்த்தேன்.. கண்கலங்கிய லாஸ்லியா
- டிரம்ப் எச்சரித்து 1 வாரம் கூட ஆகவில்லையே.. ஓடோடி வந்து வரியை குறைக்கும் இந்தியா.. வெள்ளைக்கொடி?
- சென்னை தி நகரில் 3 மாடிக்கு அனுமதி வாங்கி 10 மாடி கட்டிய பிரபல நிறுவனம்.. இடிக்க ஹைகோர்ட் உத்தரவு
- பிரம்ம முகூர்த்த நேரம் ஸ்பெஷல் இதுதான்.. குளிச்சிட்டுதான் பூஜை செய்யணுமா? குளிக்காமல் விளக்கேற்றலாமா
- டிரம்ப் போட்ட ஒரே கையெழுத்து! இந்தியாவிற்கு ரூ.60 ஆயிரம் கோடி இழப்பு! அடிமடியில் கைவைத்த அமெரிக்கா
- "ஹெச் 1பி" விசாவுக்கு தடை விதித்தால்.. இந்தியர்களுக்கு வேற என்ன விசா இருக்கு! யாருக்கு யூஸ் ஆகும்?
- ரூ.200 கோடி.. சிவகார்த்திகேயனுக்கு வந்த ஆசை.. காசை திரும்ப வாங்காமல் என்ன பண்ணுவாங்க?: பிரபலம் பளிச்
- திடீர் பரபரப்பு.. தவெக கட்டிடம் இடிப்பு.. திருவள்ளூரில் விஜய் கட்சி ஆபீஸை இடித்து தள்ளிய அதிகாரிகள்