ARTICLE AD BOX

வளர்ந்து வரும் முன்னணி இயக்குனரான லோகேஷ் கனகராஜ் ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ என்ற படத்தை தயாரித்து வருகிறார் . இது மட்டுமின்றி இவர் ரஜினியை வைத்து ‘கூலி’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் ‘சினிமாட்டிக் யுனிவர்ஸ்'(எல்.சி.யு.) என்ற கான்செப்டில் படங்களை இயக்கி வருகிறார். அந்த வகையில் ‘கைதி 2’, ‘ரோலக்ஸ்’ என்ற படங்களை இயக்க இருக்கிறார். மேலும் ராகவா லாரன்ஸ் நடிக்கும் படமான ‘பென்ஸ்’ படமும் எல்.சி.யு. வின் கீழ் உள்ளது.
இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகரான ராம் சரண் இந்த எல்.சி.யு. வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது லோகேஷ் கனகராஜ் 3 படங்களை இயக்க உள்ளார் .அதில் ‘கைதி 2’, ‘ரோலக்ஸ்’ ஆகிய இரண்டு படங்கள் உள்ளன. மேலும் மற்றொரு படத்தில் ராம்சரண் நடிப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.