ARTICLE AD BOX
இப்போது மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் வாலிபர் ஒருவர் மின்சார காரை பயன்படுத்தி பூரி சுடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் கருப்பு நிற மின்சார கார் ஒன்று நின்று கொண்டிருக்கின்றது. அப்போது அந்த காருக்கு முன்பாக வாலிபர் ஒருவர் அமர்ந்து காருடன் மின்சார அடுப்பை இணைத்து வீட்டில் சமையல் அறையில் நின்று சமைப்பை போல மாவை உருட்டி அடுப்பில் பாத்திரம் வைத்து பூரி சிடும் காட்சிகள் உள்ளன.
இந்த வீடியோ ராஜஸ்தான் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து வீடியோவை பார்த்த பையனர்கள் பலரும் நகைச்சுவையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஒரு பயனர் மின்சார வாகனங்கள் மாசு கட்டுப்பாடு பெட்ரோல் குறைப்பதோடு மட்டுமின்றி சமையல் தேவைக்கும் பயன்படும் என்பதை கண்டுபிடித்துள்ளார் என பதிவிட்டுள்ளார்.