ARTICLE AD BOX

Good Bad Ugly: அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் கடந்த 6ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அஜித் என்ன நினைத்து இந்த கதையை தேர்ந்தெடுத்து இந்த படத்தில் நடித்தாரோ அது நடக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், அஜித் ரசிகர்கள் அவரிடம் எதிர்பார்ப்பு மாஸ் காட்சிகள் நிறைந்த ஆக்சன் படங்களைத்தான்.
விடாமுயற்சி வசூல்: இந்த படத்தில் வில்லன் குரூப்பிடம் அஜித் அடி வாங்குவது போல காட்சிகள் வருவதால் படம் எடுபடவில்லை. எனவே, எதிர்பார்த்த வசூலையும் இப்படம் பெறவில்லை. படம் வெளியாகி 13 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இப்படம் இந்தியாவில் 82 கோடியை மட்டுமே வசூல் செய்திருக்கிறது. எனவே, இப்படத்தை தயாரித்த லைக்கா நிறுவனத்திற்கு கண்டிப்பாக நஷ்டம் ஏற்படும் என்றே கணிக்கப்படுகிறது.
ஆதிக் ரவிச்சந்திரன்: இந்த படத்தில் நடித்துக்கொண்டிருந்த போதே அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க துவங்கினார். ஆதிக் ‘மார்க் ஆண்டனி’ எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர் என்பதால் குட் பேட் அக்லி படத்தின் மீதும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த படம் ஒரு பக்கா கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ளது.

அதோடு, அஜித்தும் நிறைய தோற்றங்களில் வருவது போல ஏற்கனவே புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் ஹைப் ஏற்றியுள்ளது. இந்த படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் என சொல்லப்பட்டிருந்தது. அதேபோல், தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை படமும் அதே தேதியில் ரிலீஸ் என்றெல்லாம் சொன்னார்கள்.
குட் பேட் அக்லி ரிலீஸ் தேதி: இந்நிலையில்தான், குட் பேட் அக்லி படத்தை தனது பிறந்தநாளான மே 1ம் தேதியே ரிலீஸ் செய்யலாம் என்கிற ஆசை அஜித்துக்கு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஒருபக்கம், இட்லி கடை படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளி போகலாம் என்கிறார்கள். ஏனெனில், இப்போதெல்லாம் ஒரு படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர்கள் முடிவு செய்ய முடிவதில்லை. அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி நிறுவனங்கள்தான் முடிவு செய்கின்றன.
ஒருபக்கம் சூர்யாவின் ரெட்ரோ படமும் மே 1ம் தேதி ரிலீஸ் என ஒரு செய்தி இருக்கிறது. எனவே, வரிசையில் குட் பேட் அக்லி, இட்லி கடை ஆகிய படங்களின் ரிலீஸ் தேதி எப்போது என்பது மார்ச் மாதம்தான் தெரியவரும் என கருதப்படுகிறது. இதற்கிடையில், தனுஷின் இயக்கத்தில் உருவாகி நாளை வெளியாகவுள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் பிரீமியர் காட்சி இன்று மாலை சென்னையில் ஒளிபரப்பாகிறது.