ARTICLE AD BOX

Ajithkumar: தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கியவர் ஷங்கர். ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ், இந்தியன் என அசத்தலான படங்களை இயக்கியவர். மேலும், அந்நியன், சிவாஜி, எந்திரன், 2.0, ஐ போன்ற படங்களையும் இயக்கி இந்திய அளவில் முக்கிய இயக்குனராக மாறினார். அதிக பட்ஜெட்டில் படமெடுக்கும் முறைக்கு முன்னோடியே இவர்தான்.
பெரிய நடிகர்களின் படங்கள்: இவருக்கு பின்னர்தான் இவரின் சிஷ்யர் அட்லியெல்லாம் வந்தார். இப்போதுள்ள இளம் இயக்குனர்கள் இவரின் படங்களை பார்த்து வளர்ந்தவர்கள்தான். ரஜினியை வைத்து சிவாஜி, எந்திரன், 2.0, கமலை வைத்து இந்தியன், இந்தியன் 2, விஜயை வைத்து நண்பன் போன்ற படங்களை இயக்கினார்.
இந்தியன் 2 தோல்வி: இவரின் இயக்கத்தில் நடிக்க பெரிய நடிகர்களே ஆசைப்படுவார்கள். தமிழில் மட்டுமில்லாமல் பாலிவுட் நடிகர்களும் இவரின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்ட காலம் உண்டு. ஷங்கரின் இயக்கத்தில் கமல் நடித்து வெளியான இந்தியன் 2 வெற்றிபெறவில்லை.

அதேபோல், தெலுங்கில் அவர் இயக்கிய கேம் சேஞ்சர் படமும் தோல்விப்படமாக அமைந்து தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை கொடுத்தது. ஏற்கனவே வேள்பாரி நாவலை 3 பாகமாக எடுக்க திட்டமிட்டிருக்கிறேன் என ஷங்கர் சொல்லியிருந்தார். ஆனால், இப்போதுள்ள சூழ்நிலையில் ஷங்கரை நம்பி அதிக பட்ஜெட்டை போட எந்த தயாரிப்பாளரும் வரமாட்டார்.
அஜித்துக்கு போட்ட மெசேஜ்: எனவே, அடுத்து ஷங்கர் என்ன செய்யப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில்தான், அஜித்தின் பெர்சனல் செல்போன் எண்ணுக்கு ‘உங்களை சந்திக்க வேண்டும். எப்போது என சொல்லுங்கள்’ என்கிற ரீதியில் ஷங்கர் ஒரு மெசேஜ் போட்டாராம். ஆனால், இப்போதுவரை அஜித்திடம் இருந்து பதில் வரவில்லையாம்.
அஜித்துக்கு இந்த வருடம் அக்டோபர் மாதம் வரை கார் ரேஸ் இருக்கிறது. அதில் பிஸியாக இருப்பதால் ஷங்கருக்கு பதில் சொல்லவில்லையா அல்லது 2 பிளாப் படங்களை கொடுத்திருப்பதால் அவரை கண்டுகொள்ளவில்லையா என தெரியவில்லை.