ARTICLE AD BOX
அனிகா சுரேந்தர்
தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் இளம் நாயகிகளில் ஒருவர் தான் அனிகா சுரேந்தர்.
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடித்து வந்தவர் 2014ம் ஆண்டு என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமா பக்கம் வந்தார்.
அதன்பின் நானும் ரவுடித்தான், மிருதன், விஸ்வாசம், மாமனிதன், பிடி சார் என படங்கள் நடித்து வந்தவர் இப்போது நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் நடித்துள்ளார்.
சம்பளம்
அண்மையில் ஒரு பட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனிகாவிடம் சில விஷயங்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
அதில் அவர், தனக்கு விஜய் சாருடன் நடிக்க ஆசை என்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் இடம்பெறும் ஏடி பாடல் மிகவும் பிடிக்கும் என்றார்.
அவர் முதன்முதலாக பணிபுரிந்து வாங்கிய சம்பளம் ரூ. 500 என்றும் கூறியுள்ளார்.