ARTICLE AD BOX
அஜித் நடித்த ’குட் பேட் அக்லி’ திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி தமிழ் புத்தாண்டு விருந்தாக வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என்றும், டீசர் குறித்த சென்சார் தகவல் வெளியானது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில், தற்போது இந்த படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ’குட் பேட் அக்லி’ படத்தின் டீசர் வெளியாகும் தேதி மற்றும் நேரத்தை அறிவித்துள்ளார். இதனால், அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
அஜித் - த்ரிஷா நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தொழில்நுட்ப பணிகளும் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளன.
இந்த நிலையில், ‘குட் பேட் அக்லி’ டீசர் நாளை, பிப்ரவரி 28ஆம் தேதி இரவு 7:03 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என ஆதிக் ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார். இதற்காக, அவர் ஒரு புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.
மேலும், இந்த டீசர் 1 நிமிடம் 34 வினாடிகள் கொண்டதாக இருக்கும் என்றும், அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அஜித் ஸ்டைலாக இருக்கும் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
#GoodBadUglyTeaser Tomorrow at 7.03pm ❤️🙏🏻 #AjithKumar sir @MythriOfficial @SureshChandraa sir ❤️🙏🏻 pic.twitter.com/P7woUkg22E
— Adhik Ravichandran (@Adhikravi) February 27, 2025