ARTICLE AD BOX
அஜித்தின் குட் பேட் அக்லி.. என்னது ஷாலினியும் நடிச்சிருக்காங்களா?.. இது என்னங்க புது புரளி
சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்திருக்கிறார் அஜித்குமார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் திரிஷா, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. ஏப்ரல் பத்தாம் தேதி படம் ரிலீஸாகவிருக்கிறது. பிப்ரவரி 28ஆம் தேதி இந்தப் படத்தின் டீசர் வெளியாகவிருக்கும் சூழலில்; புது தகவல் ஒன்று பரவிவருகிறது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து முடித்திருக்கிறார் அஜித்குமார். ஜனவரி பத்தாம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீஸாக வேண்டிய படம் சில காரணங்களால் பிப்ரவரி ஆறாம் தேதிக்கு தள்ளிப்போனது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படத்துக்கு ரசிகர்கள் தங்களது சுமரான வரவேற்பையே கொடுத்தார்கள். அஜித்துக்குரிய மாஸ் எலிமெண்ட்ஸ் எதுவுமே படத்தில் இல்லாதது அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய குறையாக இருந்தது.

குட் பேட் அக்லி: இதற்கிடையே விடாமுயற்சி நடித்துக்கொண்டிருந்தபோதே குட் பேட் அக்லி படத்தில் நடிக்க கமிட்டானார் ஏகே. எப்போதும் ஒரு படத்தை முடித்து சில மாதம் ரெஸ்ட் எடுத்து அடுத்த படத்தின் ஷூட்டிங்கிற்கு செல்லும் அஜித் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. துபாயில் நடந்த கார் ரேஸில் கலந்துகொள்ள வேண்டுமெனில் தனக்கு இருக்கும் கமிட்மெண்ட்டுகளை முடித்துவிட வேண்டும் என்று அஜித் உறுதி எடுத்ததுதான் அவரது இந்த முடிவுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
நாக சைதன்யாவுக்குள் இப்படி ஒரு திறமையா?.. மனைவி சோபிதா வெளியிட்ட சூப்பர் சீக்ரெட்
எதிர்பார்ப்பு: திரிஷா இல்லனா நயன்தாரா படத்தில்தான் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் சரியாக போகவில்லை. அதனைத் தொடர்ந்து சிம்புவை வைத்து அவர் இயக்கிய அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படமும் சரியாக போகவில்லை. இப்படிப்பட்ட சூழலில்தான் விஷாலை வைத்து மார்க் ஆண்டனி படத்தை இயக்கினார் ஆதிக். படம் எதிர்பார்க்காத வகையில் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படம் கொண்டாடப்பட்டது. இதனால் குட் பேட் அக்லிக்கும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
டீசர் ரிலீஸ்: இப்படத்தில் திரிஷா ஹீரோயினாக நடித்திருக்கிறார். அவர் ரம்யா என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். சமீபத்தில்தான் அவரது கேரக்டர் தொடர்பான வீடியோ வெளியானது. மேலும் அஜித்குமார் ரங்கா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. படத்தின் டீசர் நாளை மறுநாள் வெளியாகவிருக்கிறது. விடாமுயற்சி படத்தில் விட்டதை இந்தப் படம் நிறைவேற்றிவிடும் என்று ஏகேவின் ரசிகர்கள் உச்சக்கட்ட நம்பிக்கையில் காத்திருக்கிறார்கள்.
விஜய் சேதுபதியின் அடுத்த படம்.. அட இந்த இயக்குநருடன் கூட்டணியா?.. செம காம்போவா இருக்குமே
படத்தில் ஷாலினி?: ஏப்ரல் பத்தாம் தேதி படம் ரிலீஸாகவிருக்கும் சூழலில் படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது இந்தப் படத்தில் சிம்ரன் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில் தற்போது ஷாலினியும் படத்தில் நடித்திருக்க வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் ஷாலினி அஜித்தை திருமணம் செய்த பிறகு ஒரு பேட்டிக்கூட கொடுப்பதில்லை. அப்படி இருக்கும்பட்சத்தில் அவர் எப்படி நடித்திருப்பார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகிறார்கள்.