ARTICLE AD BOX
அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவது பிரபல இயக்குனர் என்று கூறப்பட்டு வருவதையடுத்து, அந்த படத்தில் ஒரு சிறப்பு சம்பவம் இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
அஜித் நடித்த ;விடாமுயற்சி; திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில், அவர் நடித்து முடித்துள்ள ;குட் பேட் அக்லி’ திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது.
இந்நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை இயக்க இருப்பது கார்த்திக் சுப்புராஜ் என்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருப்பதாகவும், ’குட் பேட் அக்லி’படத்தின் வெளியீட்டுக்கு பின்னர் இந்த படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’பேட்ட’ படத்தை இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற கார்த்திக் சுப்புராஜ், தற்போது சூர்யா நடித்து வரும் ’ரெட்ரோ’ படத்தை இயக்கி வருகிறார். இதனை அடுத்து, அவர் அஜித் படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் நிச்சயமாக ஒரு சிறப்பு சம்பவம் இருக்கும் என்று கூறப்பட்டு வந்தாலும், இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை பொறுமையாக காத்திருக்கலாம்.