ARTICLE AD BOX
Ajith : விடாமுயற்சியை தொடர்ந்து அஜித்தின் நடிப்பில் வெளியாக இருக்கிறது குட் பேட் அக்லி படம். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படம் வருகின்ற ஏப்ரல் பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் அஜித்தை பற்றி பல நடிகைகள் பேட்டியில் பேசியது உண்டு. அவரைப் போன்ற ஒரு நல்ல குணம் உடையவரை பார்க்க முடியாது என்று பலரும் கூறியிருக்கின்றனர்.
இப்போது நடிகை ஒருவர் அஜித் தனக்கு வீடியோ கால் செய்து பேசியது குறித்து கூறியிருக்கிறார். அஜித்தின் அசல் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் பாவனா. இவர் இப்போது தமிழில் தலை காட்டவில்லை என்றாலும் மற்ற மொழி படங்களில் நடித்து வருகிறார்..
தன்னுடைய பட பிரமோஷனுக்காக ஒரு ஊடகத்திற்கு பேட்டி கொடுத்த பாவனா அஜித் பற்றி பேசி இருந்தார். பாவனாவும் மஞ்சுவாரியரும் நல்ல நட்புடன் இருந்து வருகின்றனர். துணிவு படப்பிடிப்பின் போது மஞ்சு வாரியரிடம் பாவனா பற்றி அஜித் பேசுவாராம்.
அஜித்துடன் வீடியோ காலில் பேசிய நடிகை
அவரைப் பற்றி விசாரிப்பதும் உண்டு. மஞ்சு வாரியரும் பாவனாவிடம் அஜித் சார் ஒன்னு கேட்டேனு சொன்னாரு என்று கூறுவாராம். இந்நிலையில் திடீரென துணிவு படப்பிடிப்பின் போது அஜித் பாவனாவுக்கு வீடியோ கால் செய்து பேசினாராம்.
ஒரு நாள் இங்க வாங்க என்று அஜித் கூறி இருக்கிறார். பாவனாவும் துணிவு நடக்கின்ற ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று இருக்கிறார். அப்போது நன்றாக பேசிவிட்டு, மதியம் சாப்பிட்டு விட்டு அங்கிருந்து கிளம்பினாராம்.
அப்போது அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இணையத்தில் வைரலானது என்றும் கூறியிருந்தார். தன்னுடைய படத்தில் கதாநாயகியாக நடித்தாலும் அவருக்கு நல்ல மரியாதை கொடுத்து, அவரை அழைத்து பேசியிருக்கிறார் அஜித்.
குறுகிய காலத்தில் வளர்ச்சி அடைந்த ஹீரோக்களை ஆணவத்தில் இருக்கின்றனர். பெரிய நடிகராக இருக்கும் அஜித் எந்த பந்தாவும் இல்லாமல் மிகவும் எளிமையாக நடந்து கொள்வார் என்பதற்கு இதுவே உதாரணம்.