அச்சச்சோ இப்படி கொட்டுதா? கவலை வேண்டாம்.. கன்னிகா சினேகனின் Hair secret

1 day ago
ARTICLE AD BOX

ஒருவரின் அழகை தலைமுடி தான் இரட்டிப்பாக்குகிறது.

நீண்ட தலைமுடி வளர்த்தால் உலக அளவில் அழகிற்கு ஒரு தகுதியானவர்களாக பார்க்கப்படுகிறார்கள். ஆனால் வயது செல்ல செல்ல தலைமுடி உதிர்வு பிரச்சினை அதிகமாக ஆரம்பிக்கிறது.

முடி உதிர்தல் பிரச்சனை மன உளைச்சல் காரணமாகவும் ஏற்படுகிறது. இதனை ஆரம்ப காலத்தில் கவனிக்காமல் விட்டால் ஒரு கட்டத்தில் வழுக்கையாக மாறி விடும்.

ஆண்களை விட பெண்களே தலைமுடி பிரச்சினையால் அதிகம் அவஸ்தைப்படுகிறார்கள். மாதவிடாய் அல்லது தைராய்டு பிரச்சனைகளால் அதிகமான தலைமுடியை இழக்கிறார்கள்.

தலைமுடியை ஆரோக்கியமாக வைத்து கொள்ள நினைப்பவர்கள் இரும்பு, துத்தநாகம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். தலைமுடியின் வேர்கள் பலவீனமாக இருக்கும் சமயத்தில் நம்மாள் தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்த முடியாது.

அந்த வகையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கன்னிகா சினேகன் அவரின் நீண்ட கூந்தலை எப்படி பராமரிக்கிறார் என்ற ரகசியத்தை பகிர்ந்துள்ளார். அந்த ரகசியம் என்ன? என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • வெந்தயம் - 1 ஸ்பூன்
  • நீர் - தேவையான அளவு

செய்முறை

ஒரு ஸ்பூன் வெந்தயத்தை எடுத்து சிறிதளவு தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறு நாள் காலையில் எழுந்து, ஊற வைத்திருக்கும் வெந்தயத்தை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்க வேண்டும்.

இந்த ஹேர் பேக்கை குளிக்கும் முன்னர் தலைமுடிக்கு அப்ளை செய்ய வேண்டும். ஹேர் பேக்கை உச்சந்தலை மற்றும் முடி முழுவதும் தடவி, சுமார் 30 நிமிடங்கள் கழித்து குளித்து விடலாம்.

இப்படி செய்யும் பொழுது உங்களின் உடலில் இருக்கும் உஷ்ணம் தணிந்து தலைமுடிக்கு தேவையான குளிர்ச்சி தன்மை கிடைத்து விடும்.       

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


Read Entire Article