ஃபீல்டிங்கில் மோசமான சாதனை படைத்த இந்திய அணி!

7 hours ago
ARTICLE AD BOX

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி ஃபீல்டிங்கில் மோசமான சாதனை படைத்துள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபையில் இன்று (மார்ச் 9) நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 251 ரன்கள் குவித்தது. 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.

இதையும் படிக்க: பிரையன் லாராவின் மோசமான சாதனையை சமன்செய்த ரோஹித் சர்மா!

ஃபீல்டிங்கில் மோசமான சாதனை

நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணி வீரர்கள் கொடுத்த 4 கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டது. இதன் மூலம், நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தவறவிட்ட கேட்ச்சுகளின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒரு அணி தவறவிட்ட அதிகபட்ச கேட்ச் எண்ணிக்கை இதுவாகும்.

மொத்தம் எட்டு அணிகள் பங்குபெற்ற இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கேட்ச்சுகளை தவறவிடுவதன் அடிப்படையில், இந்திய அணி 3-வது இடத்தில் உள்ளது. ஃபீல்டிங்கில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளை விட மட்டுமே இந்திய அணி சிறப்பாக செயல்பட்டுள்ளது.

இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபியுடன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஓய்வா? ஷுப்மன் கில் பதில்!

இன்றையப் போட்டியில் ரச்சின் ரவீந்திரா கொடுத்த இரண்டு கேட்ச் வாய்ப்புகளை இந்திய அணி தவறவிட்டது. முதல் முறை கிடைத்த கேட்ச் வாய்ப்பை முகமது ஷமி தவறவிட்டார். அதன் பின், கிடைத்த இரண்டாவது வாய்ப்பை ஸ்ரேயாஸ் ஐயர் தவறவிட்டார். டேரில் மிட்செல் கொடுத்த கடினமான கேட்ச் வாய்ப்பினை கேப்டன் ரோஹித் சர்மா தவறவிட்டார். கிளன் பிலிப்ஸ் கொடுத்த கேட்ச் வாய்ப்பினை துணைக் கேப்டன் ஷுப்மன் கில் தவறவிட்டார்.

Read Entire Article