ஃபங்சனுக்கு போனா வாயில விரல விட்டு ஆட்டுறான்!.. ஃபன்னி கய்!. பிரபுதேவாவை திட்டிய வடிவேலு!..

1 day ago
ARTICLE AD BOX

Vadivelu: பிரபுதேவாவுக்கும், நடிகர் வடிவேலுவுக்கும் இடையே நல்ல நட்பு உண்டு. இருவரும் ஒன்றாகவே சினிமாவில் வளர்ந்தவர்கள். பிரபுதேவா ஹீரோவாக நடித்த பல படங்களில் அவருடன் வடிவேலு நடித்திருக்கிறார். காதலன், ராசைய்யா, மிஸ்டர் ரோமியோ, மனதை திருடி விட்டாய், லவ் பேட்ஸ், எங்கள் அண்ணா என சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்த எல்லா படங்களிலுமே வயிறு குலுங்க வைக்கும் காமெடி காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அதிலும், மனதை திருடி விட்டாய் படத்தில் படம் முழுக்க பட்லர் இங்கிலீஷ் பேசும் வேடத்தில் அசத்தியிருப்பார் வடிவேலு. அதிலும், ‘ஒய் பிளட் சேம் பிளட்’ என்கிற வசனம் இப்போதுவரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த படத்தில் வடிவேலு பேசும் ‘நீங்களா மனசுங்களாடா’ என்கிற வசனம் இப்போதுவரை மீம்ஸ் மெட்டீரியலாக இருக்கிறது.


இந்நிலையில்தான் சமீபத்தில் ஒரு பிரம்மாண்டமான நடன நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில், பிரபுதேவா பல பாடல்களுக்கும் நடனம் ஆடினார். இந்த நிகழ்ச்சியில் தனுஷ், எஸ்.ஜே.சூர்யா, பாக்கியராஜ், மீனா, ரம்பா, அதிதி ஷங்கர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்கள். புதிய மற்றும் பழைய நடிகர்கள் என பலரும் கலந்துகொண்டதால் நிகழ்ச்சி களைகட்டியது.

அப்போது காதலன் படத்தில் இடம் பெற்ற ‘பேட்ட ராப்’ பாடலுக்கு நடனமாடி கொண்டிருந்த பிரபுதேவா மேடையிலிருந்து வடிவேலுவை பார்த்துகொண்டே இருந்தார். திடீரென கீழே இறங்கி வந்து அவரின் வாயில் விரலை விட்டு ஆட்டினார். மேலும், தலைமுடியை கலைத்துவிட்டு அங்கிருந்து போய்விட்டார்.


வடிவேலுவோ ‘ஏன்டா டேய்’ என்பது போல ரியாக்‌ஷன் கொடுத்தார். இது எல்லாவற்றையும் வடிவேலு அருகில் அமர்ந்திருந்த தனுஷ் கைத்தட்டி ரசித்து பார்த்துக்கொண்டிருந்தார். இதனால், நிகழ்ச்சியே வைப்பாக மாறியது. இது தொடர்பான் வீடியோக்கள் நேற்று இணையத்தில் பகிரப்பட்டு வைரலானது.

இந்நிலையில், நிகழ்ச்சி முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய வடிவேலு ‘இந்த நிகழ்ச்சிக்கு வர சொன்னாருன்னு வந்தேன். ஆனா வாய்க்குள்ள விரலை விட்டு ஆட்டிக்கிட்டு இருக்காரு. ஷூட்டிங் ஸ்பாட்லயும் இப்படித்தான் என்கிட்ட விளையாடிக்கிட்டே இருப்பாரு.. அதற்கு ரோஜாதான் சாட்சி. உண்மையிலேயே தமிழ்நாட்டுக்கு கிடைத்த வரப்பிரசாதம் பிரபுதேவா. இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் அவர்தான்’ என சொல்லியிருக்கிறார்.

Read Entire Article