Zero Day | Bottle Radha | Dragon | Babygirl - இந்த வார லிஸ்ட் ரெடி!

3 days ago
ARTICLE AD BOX
Published on: 
21 Feb 2025, 6:32 am
Series
The White Lotus S3 (English) Jio Hotstar - Feb 17

Mike White இயக்கியுள்ள சீரிஸ் The White Lotus. இதன் மூன்றாவது சீசன் வெளியாக இருக்கிறது. ஆடம்பர ரிசார்ட் ஒன்றில் தங்கி இருக்கும் விருந்தினர்களுக்கு நடக்கும் விஷயங்களே கதை.

Oops Ab Kya (Hindi) Jio Hotstar - Feb 20

Prem Mistry மற்றும் Debatma Mandal இயக்கியுள்ள சீரிஸ் `Oops Ab Kya’. மெடிகல் செக்கப் ஒன்றின் போது ஏற்படும் விபத்தை தொடர்ந்து, ரூஹி வாழ்க்கையில் வரும் சிக்கல்கள் என்னென்ன என்பதே கதை.

Zero Day (English) Netflix - Feb 20

Lesli Linka Glatter இயக்கத்தில் Robert De Niro, Lizzy Caplan, Jesse Plemons ஆகியோர் நடித்துள்ள சீரிஸ் `Zero Day' சைபர் அட்டாக் ஒன்றின் பின் இருக்கும் அரசியல் காரணங்களே கதை.

Reacher S3 (English) Prime - Feb 20

Lee Child எழுதிய Jack Reacher novel seriesல் Killing Floor நாவலை மையமாக வைத்து உருவானது 2022ல் வெளியான Reacher. தற்போது இரண்டாவது மூன்றாவது சீசன் வெளியாகிறது. எந்த இலக்குமின்றி பயணிக்கும் ரீச்சருக்கு, இந்த முறை என்ன சவால் வருகிறது, அதை எப்படி சமாளிக்கிறார் என்பதே கதை.

Office (Tamil) Jio Hotstar - Feb 21

பணி இடத்தில் நடக்கும் விஷயங்களை வைத்து உருவாகியிருக்கும் சீரிஸ் `ஆஃபீஸ்’.

Crime Beat (Hindi) Zee5 - Feb 21

சுதீர் மிஷ்ரா மற்றும் சஞ்ஜீவ் இயக்கியுள்ள சீரிஸ் `Crime Beat'. பத்திரிகையாளர் ஒருவர், உண்மை ஒன்றை கண்டுபிடிக்க நடத்தும் போராட்டமே கதை.

Post Theatrical Digital Streaming
The Penguin and the Fisherman (English) Prime - Feb 16David

Schurmann இயக்கியுள்ள படம் `The Penguin and the Fisherman'. ஆயில் கசிவில் இருந்து ஒரு பெண்குயினை காப்பாற்றுகிறார் மீனவர் ஒருவர். அதன் பின் நடப்பவையே கதை.

The Wild Robot (English) Hotstar - Feb 18

Lilo & Stitch, How to Train Your Dragon, The Croods போன்ற படங்களை இயக்கிய Chris Sanders தற்போது இயக்கிய படம் `The Wild Robot’. ராஸ் என்ற இன்டலிஜண்ட் ரோபோவை தீவு ஒன்றில் எறிகிறார்கள். அங்கு ராஸ் வாழ்வதற்காக என்னென்ன செய்கிறது என்பதே கதை.

Bottle Radha (Tamil) Aha - Feb 21

தினகர் சிவலிங்கம் இயக்கத்தில் குரு சோமசுந்தரம் நடித்துள்ள படம் `பாட்டல் ராதா'. குடிநோயாளியான ராதா வாழ்வில் வரும் சிக்கல்களே படம்.

Daaku Maharaaj (Telugu) Netflix - Feb 21

பாபி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்த படம் `Daaku Maharaaj'. மக்களின் பிரச்சனைகளை தீர்க்க அதிகாரி ஒருவர், போராளியாவதே கதை.

Theatre
Officer on Duty (Malayalam) - Feb 20

ஜித்து அஷ்ரஃப் இயக்கத்தில் குஞ்சாக்கோ போபன் நடித்துள்ள படம் `Officer on Duty’. காவலதிகாரியான ஹரிஷங்கர், நகை மோசடி வழக்கை கையில் எடுக்க, அதன் பின் வரும் பிரச்சனைகளே கதை.

Dragon (Tamil) - Feb 21

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா, மிஷ்கின் நடித்துள்ள படம் `டிராகன்’. கல்லூரியில் கெத்தாக வாழ்ந்த இளைஞன், படிப்பு முடிந்த பின் என்ன ஆகிறான் எனபதே கதை.

Nilavukku Enmel Ennadi Kobam (Tamil) - Feb 21

தனுஷ் இயக்கியுள்ள படம் `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’. முன்னாள் காதலியின் திருமணத்துக்கு செல்லும் இளைஞன் மற்றும் அவனது நண்பர்கள், என்ன விஷயங்களை சந்திக்கிறார்கள் என சொல்லும் கதை.

Ramam Raghavam (Telugu) - Feb 21

தன்ராஜ் எழுதி இயக்கி நடித்துள்ள படம் `Ramam Raghavam'. நேர்மையான தந்தையின் வீழ்ச்சிக்கு காரணமாகும் மகன், பின்பு என்ன செய்கிறான் என்பதே கதை.

Get Set Baby (Malayalam) - Feb 21

வினய் கோவிந்த் இயக்கத்தில் உன்னி முகுந்தன் நடித்துள்ள படம் `Get Set Baby'. பெண்கள் சூழ்ந்திருக்கும் மகப்பேறு மருத்துவ துறையில், ஒரு ஆணாக ஹீரோ எதிர் கொள்ளும் சவால்கள் என்ன என்பதே கதை.

Mere Husband Ki Biwi (Hindi) - Feb 21

முடாசர் அஸிஸ் இயக்கத்தில் அர்ஜூன் கபூர், புமி, ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ள படம் `Mere Husband Ki Biwi'. முன்னாள் காதலி ஒருவருடைய வாழ்க்கையில் திரும்ப வருகிறார், அதன் பின் என்னாகிறது என்பதே கதை.

Dark Nuns (Koran) - Feb 21

Hyeok-Jae Kwon இயக்கியுள்ள படம் `Dark Nuns'. Hee-Joon என்ற சிறுவனை பீடித்திருக்கும் தீய சக்தியை துரத்தும் முயற்சிகளே கதை

Babygirl (English) - Feb 21

Halina Reijn இயக்கத்தில் Nicole Kidman நடித்துள்ள படம் ` Babygirl'. ரோமி மேத்திஸ் என்ற சி இ ஓவுக்கு, இளைஞர் ஒருவர் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. அதன் விளைவுகள் பற்றி பேசுகிறது படம்.

Read Entire Article