ARTICLE AD BOX
Zee Tamil Serials: தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் மக்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
புது சீரியல் அறிமுகம்
இதனால், ஜீ தமிளழ் சேனல் தரப்பில் இருந்து புதுப்புது தொடர்களை ஒளிபரப்ப தொடங்கி வருகின்றன. மதிய வேளையில் மனசெல்லாம், இரவு வேளையில் கெட்டிமேளம் போன்ற சீரியல்கள் சமீபத்தில் ஒளிபரப்பாக தொடங்கிய நிலையில் வரும் திங்கள் ( மார்ச் 17 ) முதல் ராமன் தேடிய சீதை என்ற புது சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.
ஒளிபரப்பு நேரம்
கன்னடத்தில் வெற்றி பெற்ற சீதா ராமன் என்ற சீரியலின் டப்பிங் சீரியலாக இது ஒளிபரப்பாக உள்ளது. திங்கள் முதல் சனி வரை மதியம் 2:30 மணிக்கு ஒளிப்பரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிரடி மாற்றம்
இதன் காரணமாக வரும் இதுவரை 2:30 மணிக்கு ஒளிபரப்பாக வந்த மனசெல்லாம் சீரியல் இனி 3 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. மேலும் நானே வருவேன் சீரியல் இனி 3:30 மணிக்கு ஒளிபரப்பாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சீரியலின் கதை
பிறப்பிலேயே சக்கரை வியாதியால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையுடன் தனி ஆளாக வாழ்ந்து வரும் சீதையின் வாழ்க்கையில் ராமனின் வருகை எப்படியான தாக்கத்தை ஏற்படுத்த போகிறது? ராமனின் வருகையால் சீதையின் வாழ்க்கை வண்ணமயமாகுமா? என்பது தான் இந்த சீரியலின் கதைக்களம்.
கன்னடத்தில் பலரின் பேவரைட் சீரியலாக இடம் பிடித்து வெற்றி பெற்ற சீரியலின் தமிழ் டப்பிங்கான ராமன் தேடிய சீதை சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வரும் திங்கள் முதல் காணத்தவறாதீர்கள்.
பேவரைட் லிஸ்ட்டில் இடம் பிடித்த கெட்டி மேளம்
சில வாரங்களுக்கு முன் ஜீ தமிழில் அறிமுகம் செய்யப்பட்ட சீரியல் தான் கெட்டி மேளம். பல முன்னணி நடிகர்களுடனும் புது முகங்களுடனும் இணைந்து எடுக்கப்பட்டு வரும் இந்த சீரியல் வெளியான சில நாட்களிலேயே பலரது பேவரைட் லிஸ்ட்டில் இடம் பிடித்து விட்டது. எதிர்பார்க்காத கதை, சிக்கலான உறவுமுறை என குடும்பம், பாசம், பழி வாங்கல் என சீரியல் ஆரம்பத்திலேயே விறுவிறுப்பாக செல்வதால் சில நாட்களிலேயே டிஆர்பிக்குள்ளும் நுழைந்தது.
அதே சமயம், ஜீ தமிழ் சீரியலில் ஒளிபரப்பாகும், கார்த்திகை தீபம், அண்ணா, வீரா, இதயம், மனசெல்லாம் போன்ற சீரியல்களுக்கும் வெகுவான ரசிகர்கள் உள்ளனர்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
