
பிப்ரவரி 27, புனே (Maharashtra News): மகாராஷ்டிர மாநிலம், சதாரா மாவட்டத்தின் பால்தான் நகருக்கு செல்வதற்காக, 26 வயது இளம்பெண் ஒருவர், புனேவில் ஸ்வராகேட் பேருந்து நிலையத்தின் நடைமேடையில் நின்றுள்ளார். நேற்று முன்தினம் (பிப்ரவரி 25) அதிகாலை 5.45 மணியளவில், அங்கு வந்த மர்ம நபர் அப்பெண்ணிடம், நீங்கள் எங்கு செல்ல வேண்டும்? என கேட்டுள்ளார். அதன்பின், பால்தான் நகருக்கு செல்ல காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். உடனே அவர், அந்த பேருந்து அடுத்த நடைமேடையில் நிற்பதாக கூறி, அப்பெண்ணை ஏமாற்றி அழைத்துச் சென்றார். அங்கு எந்த வெளிச்சமும் இல்லாத பேருந்தை சுட்டிக்காட்டி, அதில் ஏறுமாறு கூறியுள்ளார். Assam Earthquake: அசாமில் திடீர் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு..!
இளம்பெண் பாலியல் பலாத்காரம்:
முதலில் பேருந்தில் ஏற தயங்கிய அப்பெண்ணிடம், பால்தான் செல்லும் பேருந்து இதுதான் என மீண்டும் கூறியுள்ளார். இதனை நம்பி பேருந்தில் ஏறிய இளம்பெண்ணை மிரட்டி, பாலியல் வன்கொடுமை (Sexual Assault) செய்துள்ளார். இதன் பின், அவர் தலைமறைவானார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், பேருந்து நிலையத்தில் அப்பெண்ணை அழைத்து சென்ற மர்ம நபர், தத்தாத்ரேய ராம்தாஸ் காடே (வயது 36) என்பதை கண்டறிந்தனர். அவர் மீது ஏற்கனவே ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. தப்பியோடிய ராம்தாஸ் காடேவை பிடிக்க, தனிப்படைகளை அமைத்து காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.