ARTICLE AD BOX
WPL 2025: பெண்கள் பிரீமியர் லீக் 2025 இன் முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் பெண்களுக்கான பிரீமியர் லீக் (டபிள்யு.பி.எல்.,) டி20 தொடர் நடத்தப்படுகிறது. மும்பை, டில்லி, குஜராத், பெங்களூரு, உ.பி., என ஐந்து அணிகள் பங்கேற்கின்றன. போட்டிகள் வதோதரா (குஜராத்), லக்னோ (உ.பி.,) என இரு இடங்களில் நடக்க உள்ளன. இத்தொடரில் சர்வதேச வீராங்கனைகளுக்கு, இந்திய அணியின் இளம் வீராங்கனைகள் சவால் கொடுத்து சிறப்பாக செயல்படுகின்றனர்.
2023ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் போட்டியின் கடந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றிபெற்று கோப்பையை தட்டிச்சென்றது. இந்தநிலையில், இதன் 3வது சீசன் தற்போது தொடங்கியுள்ளது. அதன்படி, நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி, இந்த சீசனை ஒரு பெரிய வெற்றியுடன் தொடங்கியுள்ளது. வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதல் போட்டியில், குஜராத் மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
குஜராத் அணி சார்பில் கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் அதிகபட்சமாக 79 ரன்கள் குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது. 202 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய பெங்களூரு அணியில், விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் அபாரமாக விளையாடி அதிகபட்சமாக 64 ரன்கள் எடுத்தார். எல்லீசி பெரியின் அரைசதமும் அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தியது. 9 பந்துகள் மீதம் இருக்கும்போதே, 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, வெற்றிக்குத் தேவையான 202 ரன்களை எட்டி, நடப்பு சாம்பியனான பெங்களூரு அணி, வெற்றிபெற்றது.
மகளிர் பிரீமியர் லீக் வரலாற்றில் அதிக ஸ்கோரை துரத்திய அணியாக ஆர்சிபி மாறியுள்ளது. WPL வரலாற்றில் 200 ரன்களுக்கு மேல் வெற்றிகரமாக துரத்திய முதல் அணியும் RCB தான். முன்னதாக இந்த சாதனை 2024 ஆம் ஆண்டு குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிராக 191 ரன்கள் இலக்கை அடைந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் பெயரில் இருந்தது. WPL வரலாற்றில் நான்கு பெரிய சேஸிங் குஜராத் அணிக்கு எதிராக மட்டுமே செய்யப்பட்டுள்ளது என்பது குஜராத்துக்கு அவமானகரமான விஷயம்.
மகளிர் பிரீமியர் லீக்கில் கடந்த நான்கு போட்டிகளில் ஆர்சிபி தோல்வியடையவில்லை. பெங்களூரு அணி தனது கடைசி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று WPL 2024 இல் ஹாட்ரிக் வெற்றிகளைப் பதிவு செய்தது. அதே நேரத்தில், WPL 2025 இன் முதல் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், அதன் வெற்றிப் பயணத்தை நான்கு போட்டிகளாக நீட்டித்துள்ளது.
Readmore: 17 ஆண்டுகளுக்குப் பிறகு காலாண்டு வருவாயில் லாபம் ஈட்டிய BSNL நிறுவனம்…!
The post WPL 2025| எலிஸ் பெர்ரி, ரிச்சா கோஷ் சரவெடி!. முதல் போட்டியிலேயே இத்தனை சாதனைகளா?. வரலாறு படைத்த RCB!. appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.