ARTICLE AD BOX
இந்தியாவில் காற்றின் தரம் ஒரு முக்கியமான சுற்றுச்சூழல் சவாலாக இருக்கின்றது. எனினும் பல்வேறு நகரங்களில் குறிப்பிட்ட தக்க மாறுபாடுகளுடன் இந்தியா முழுவதும் உள்ள நகரங்களை மதிப்பிடுவது அவற்றிற்கிடையே உள்ள வேறுபாட்டை எடுத்துக்காட்டுகின்றது. இந்நிலையில் 2025 இல் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்தியா முழுவதும் உள்ள நகரங்களுக்கான சமீபத்திய காற்று தர குறியீட்டு தரவை வெளியிட்டுள்ளது.
இந்த அட்டவணை தற்போது சிறந்த மற்றும் தூய்மையான காற்றின் தரத்தை அனுபவிக்கும் நகரங்களை எடுத்துரைக்கின்றது. அதில் இந்திய நகரங்களில் மிகச்சிறந்த காற்றின் தரம் இருக்கும் நகரமாக நெல்லை விளங்குகின்றது. தமிழ்நாட்டின் நெல்லை முதலிடத்திலும், அருணாச்சலம் பிரதேசத்தின் நாகர் லகுன் இரண்டாவது இடத்தையும், கர்நாடகாவின் மடிக்கேரி பகுதி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. இதனையடுத்து தஞ்சாவூர் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.
காற்றின் தரம் சிறப்பாக இருக்கும் மாநிலங்களில் கர்நாடகாவின் கப்பல், உத்தரபிரதேசத்தின் வாரணாசி மற்றும் கேரளாவின் கண்ணூர் நகரமும் இடம் பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து காற்றின் தரம் மிக மோசமாக இருக்கும் நகரத்தில் முதலிடத்தை இந்திய தலைநகரான புது டெல்லி பிடித்துள்ளது. மோசமான காற்று தரம் உள்ளதாக இரண்டாவது இடத்தை உத்தரப்பிரதேச மாநிலத்தின் காசியாபாத், மூன்றாவது இடத்தினை மேகலாயாவின் பிரிங் ஹெட் நகரமும் பிடித்துள்ளன. மேலும் சண்டிகர் உத்தரபிரதேசம் ஜார்கண்ட், ஹிமாச்சலப் பிரதேசம் மகாராஷ்டிரா ஆகியவை காற்றின் தரம் மோசமாக உள்ள முதல் 10 மாநில பட்டியலில் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.