Wi-Fi Password மறந்துவிட்டதா? உங்கள் ஸ்மார்ட்போனில் கண்டுபிடிப்பது இனி சுலபம்!

19 hours ago
ARTICLE AD BOX

ஸ்மார்ட்போன்கள், நாம் பேசுவதைத் தாண்டி, இணையம் மூலம் உலகத்தையே உள்ளங்கையில் கொண்டு வரும் சக்தி இதற்கு உண்டு. சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் பெருகிய பிறகு, ஸ்மார்ட்போன்களின் இணைய பயன்பாடு பல மடங்கு அதிகரித்துள்ளது. இதற்காக நாம் ஒவ்வொரு மாதமும் அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் டேட்டா பேக் போட்டு ரீசார்ஜ் செய்ய வேண்டியிருக்கிறது. 

அதுமட்டுமின்றி, பலரும் தினமும் வெவ்வேறு வைஃபை இணைப்புகளை தங்கள் போன்களில் பயன்படுத்துகிறோம். இணைய சேவை வழங்குபவர்களும், ரூட்டர் தயாரிப்பாளர்களும் சிக்கலான கடவுச்சொற்களை அமைப்பதால், நாம் இணைத்த வைஃபை நெட்வொர்க்கின் கடவுச்சொல்லை விரைவில் மறந்துவிடுகிறோம்.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் போன்ற நவீன ஸ்மார்ட்போன்கள், நாம் இதற்கு முன்பு இணைத்த வைஃபை கடவுச்சொற்களை தானாகவே சேமித்து வைக்கும் வசதியைக் கொண்டுள்ளன. இருப்பினும், எப்போதோ ஒருமுறை இணைத்த நெட்வொர்க்கின் உண்மையான கடவுச்சொல்லை மீண்டும் பார்க்க வேண்டிய சூழ்நிலை வந்தால், அது சற்று சிரமமானதாக இருக்கலாம். இந்த கவலையை போக்க, உங்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் சாதனங்களில் சேமிக்கப்பட்ட வைஃபை கடவுச்சொல்லை எப்படி எளிதாக கண்டுபிடிப்பது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

முதலில் ஆண்ட்ராய்டு போனில் எப்படி பார்ப்பது என்று தெரிந்துகொள்வோம். பெரும்பாலான புதிய ஆண்ட்ராய்டு போன்களில், டேப்லெட்கள் உட்பட, வைஃபை கடவுச்சொல்லை எளிதாக பார்க்கவும், மற்றவர்களுடன் பகிரவும் ஒரு வசதி உள்ளது. இதை கண்டுபிடிக்க, உங்கள் ஆண்ட்ராய்டு போனின் செட்டிங்ஸ் ஆப்பை திறந்து, அதில் வைஃபை அல்லது நெட்வொர்க் சம்பந்தப்பட்ட பகுதிக்கு செல்லவும். சாம்சங் போன் பயன்படுத்துபவராக இருந்தால், இது "இணைப்புகள்" என்ற விருப்பத்தின் கீழ் இருக்கும்.

அடுத்து, நீங்கள் தற்போது இணைக்கப்பட்டிருக்கும் வைஃபை பெயருக்கு அருகில் உள்ள செட்டிங்ஸ் ஐகானை அழுத்தவும். பின்னர், கடவுச்சொல் இருக்கும் இடத்திற்கு பக்கத்தில் உள்ள கண் போன்ற ஐகானை கிளிக் செய்தால், நீங்கள் பயன்படுத்திய கடவுச்சொல் திரையில் தெரியும். ஒருவேளை கடவுச்சொல் தெரியவில்லை என்றால், அங்கு ஒரு கியூஆர் கோடுடன் கூடிய "பகிர்" (Share) என்ற பட்டன் இருக்கும். அதை தொட்டவுடன், கீழே வைஃபை கடவுச்சொல் காட்டப்படும்.

இப்போது ஐபோனில் எப்படி பார்ப்பது என்று பார்க்கலாம். ஐபோனில் வைஃபை கடவுச்சொல்லை பார்க்க, நீங்கள் ஃபேஸ் ஐடி அல்லது டச் ஐடியை பயன்படுத்த வேண்டியிருக்கும். நீங்கள் இணைந்திருக்கும் வைஃபை கடவுச்சொல்லை பார்ப்பது ஐபோனில் மிகவும் எளிமையானது. முதலில், செட்டிங்ஸ் ஆப்பை திறந்து வைஃபை என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும். பிறகு, நீங்கள் இணைக்கப்பட்டிருக்கும் வைஃபை பெயரை கண்டுபிடித்து, அதன் வலது பக்கத்தில் உள்ள சிறிய "i" ஐகானை கிளிக் செய்யவும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் தூக்கத்தை ஏழு மணி நேரம் வரை என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்!
Wi-Fi password

அடுத்து, உங்கள் ஐபோன் திரையில் உள்ள "கடவுச்சொல்" (Password) என்ற இடத்தில் தட்டவும். உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்த ஃபேஸ் ஐடி அல்லது டச் ஐடியை பயன்படுத்தும்படி கேட்கும். அதை கொடுத்தவுடன், நீங்கள் தேடிய வைஃபை கடவுச்சொல் உங்களுக்கு எளிதாக கிடைத்துவிடும்.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்கள் தாங்கள் மறந்துபோன வைஃபை கடவுச்சொல்லை இந்த எளிய முறைகள் மூலம் விரைவாகவும், சிரமமில்லாமலும் கண்டறியலாம். அடிக்கடி வெவ்வேறு வைஃபை நெட்வொர்க்குகளுடன் இணைப்பவர்களுக்கு இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
பதற்றமாகும் chatgpt… ஆய்வில் புதிய தகவல்!
Wi-Fi password
Read Entire Article